டங் டங்னு சத்தம் வரும்.. நாசமாப் போன நேசமணி.. எல்லாத்துக்கும் காரணம் இவர்தான்! #Nesamani
யார் இந்த நேசமணி.. ட்விட்டரில் வைரலாகிறது நேசமணி ஹேஷ்டேக்
Recommended Video
சென்னை: தேசிய அளவில் இன்று நேசமணிதான் ஒரே பேச்சாக உள்ளது. அந்த அளவுக்கு மறந்து போன நேசமணியைத் தூக்கிக் கொண்டு நாட்டையே அல்லோகல்லப்படுத்திக் கொண்டுள்ளனர் வடிவேலு ரசிகர்கள். ஹூ இஸ் திஸ் நேசமணி.. நேஷன் வான்ட்ஸ் டு நோ என்று அர்னாபே அலறும் அளவுக்கு டிரெண்டிங்கில் உள்ளது நேசமணி.
தமிழக மக்களின் வாழ்வில் ஒரு அங்கம்தான் நேசமணி. ஒவ்வொரு தெருவிலும் ஒரு நேசமணி கேரக்டரை சந்திக்க முடியும். அந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கையில் உள்வாங்கிப் போனவர் இந்த நேசமணி.
பிரண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலு கேரக்டர் பெயர்தான் நேசமணி. மின்னலென வந்து மனங்களை அள்ளிச் சென்ற காமெடிக் காட்சிகள் அவை. அதை வைத்துத்தான் இப்போது இணையதளங்களை கலக்கி வருகின்றனர். இன்று இந்த நேசமணி ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெட்டிசன்கள்
நேசமணிக்கு என்னாச்சு, நேசமணி குணமடைய பிரார்த்திக்கிறோம் என்று பல விதமான பெயர்களில் நேசமணியை டிரெண்ட் ஆக்கி வளைத்து வளைத்து விளையாடி வருகின்றனர் நெட்டிசன்கள். ஏன் இப்படி திடீரென கிளம்பினர் என்று தெரியவில்லை. ஆனால் பிரதமர் மோடி இன்று பதவியேற்கவுள்ள நிலையில் இந்த டிரெண்ட் கிளம்பியுள்ளதால் மோடி பதவியேற்பை இருட்டடிப்பு செய்யும் நோக்கமா என்ற சிந்தனையும் நமக்கு வருகிறது.

சுத்தியல்
சரி அதை விடுங்க.. நேசமணி மேட்டர் இந்த அளவுக்கு பரபரப்பாக யார் காரணம் தெரியுமா.. அந்த விக்னேஷ் பிரபாகர்தான் காரணம். ஒரு பேஸ்புக் போஸ்ட்டில் சுத்தியல் குறித்து அவர் கொடுத்த விளக்கம்தான் இன்று வைரலாகி நேசமணி ஹேஷ்டேக்கை உலா வர வைத்து விட்டது.
|
டங்.. டங்
அந்த பேஸ்புக் போஸ்ட்டில் சுத்தியல் குறித்து பிரபாகர் கூறுகையில், இதுதான் சுத்தியல். இதை எது மீதாவது அடித்தால் டங் டங் என சத்தம் வரும். இதேபோன்ற ஒரு சுத்தியலால்தான் பெயிண்டிங் காண்டிராக்டர் நேசமணியின் மண்டையை ஜமீன் பாலஸில் உடைத்தனர். பாவம் என்று கூறப் போக, இன்னொருவர் பின்னாடியே வந்து இப்படி எப்படி இருக்கிறார் நேசமணி என்று கேட்க, பரவாயில்லை, குணமாகி வருகிறார் என்று பிரபாகர் பதிலளிக்க.. அவ்வளவுதான் இது காட்டுத் தீ போல பரவி விட்டது.
|
கலாய்ப்பு
பிறகென்ன ஆளாளுக்கு விளையாட ஆரம்பித்து இன்று விதம் விதமான டிசைன்களில் கலாய்த்துக் கொண்டுள்ளனர் மக்கள். அதில் ஒன்று இது. அதாவது எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், நேசமணியின் இந்த நிலைக்குக் காரணமான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று கடிதம் எழுதுவது போல ஒரு டிவீட்
|
நடிகர் மனோபாலா
அடேய் நேசமணி உனக்கு என்னப்பா ஆச்சு.. ரொம்பக் கவலையாக கேட்டு டிவீட் போட்டுள்ளார் நம்ம மனோபலம்.. அதாவது நடிகர் மனோபாலா.
|
தமிழர்களே.. தமிழர்களே..
ஒரே ஒரு மனுஷன் போட்ட ஒரே ஒரு கமெண்ட். மொத்த டிவிட்டரும் குளோஸ். .தமிழர்களே. தமிழர்களே.. உங்களை கடலில் தூக்கிப் போட்டாலும் மீம்ஸ் போட மறக்க மாட்டீர்கள்... இப்படித்தான் நமக்குத் தோணுது. என்னவோ போங்கப்பா.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications