நமிதாவுக்கு என்னாச்சு?.. "அதுக்கு" மட்டும் நாங்கள் தேவையா?.. நெட்டிசன்கள் திடீர் "ஸ்டிரைக்"!
சென்னை: பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வாக்களியுங்கள் என உரிமையுடன் கேட்கும் பிக்பாஸ், நமிதா மாரிமுத்து வெளியேறியதற்கான காரணத்தையும் சொல்லுங்கள், அதுவரை நாமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களுக்கு வாக்களிக்க மாட்டோம் என நெட்டிசன்கள் திடீர் "போர்க் கொடி" உயர்த்தியுள்ளனர்.
Recommended Video
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதல் முறையாக திருநங்கையர் நமிதா மாரிமுத்து பங்கேற்றார். இவர் மாடலிங், நடிகையாவார். மிகவும் வசதியான வீட்டில் பிறந்த இவர் சிறு வயதில் தனது உடலில் ஏற்பட்ட அந்தரங்க மாற்றங்களால் பெற்றோரிடம் எத்தனை துன்பத்தை அனுபவித்தார் என்பதை மிகவும் உருக்கமாக தெரிவித்தார்.
திருநங்கையர்கள் எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் முன்னுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு உதவாவிட்டாலும் கேலி கிண்டல் செய்து அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாம் என நமிதா கேட்டுக் கொண்டார்.

உரிமைகள்
மேலும் இந்த பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 100 நாட்களும் எங்கள் உரிமைகள் தொடர்பாக இந்த சமூகத்தை கேள்விக் கேட்டு கொண்டே இருப்பேன் என உரிமையாக கடிந்து கொண்டார். இவரது கதையை கேட்ட பிக்பாஸ் பார்க்கும் மக்கள் அவருக்கு பெருவாரியான ஆதரவை கொடுத்தனர். மேலும் நமிதா டைட்டில் வின்னராக வேண்டும் என விரும்பினர்.

நமிதா வெளியேற்றம்
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வேளையாக பிக்பாஸ் வீட்டிலிருந்து நமிதா மாரிமுத்து வெளியேறிவிட்டார் என கடந்த சனிக்கிழமை பிக்பாஸ் அறிவித்தார். இது நேரடி பார்வையாளர்களுக்கும் டிவி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நமிதாவுக்கு என்னாச்சு என ஆளாளுக்கு சமூகவலைதளங்களில் கேள்வி வந்தனர்.

கமல்ஹாசன்
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி முடியும் போது கமல்ஹாசன் ஏதாவது தெளிவுப்படுத்துவார் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. விஜய் டிவி மட்டுமில்லை எந்த ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்தாலும் மக்கள்தான் வாக்களித்து வெற்றியாளர்களை தேர்வு செய்கிறார்கள். அப்படியிருக்கும் போது நமிதாவுக்கு ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணம் என்ன என்பதை பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் ஏன் சொல்ல மறுக்கிறார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதயத்தை தொட்ட நமிதா
பிக்பாஸ் வீட்டில் மட்டுமல்ல, கமல்ஹாசன் உள்பட பெருவாரியான மக்களின் இதயத்தை வென்ற நமிதா மறு என்ட்ரி கொடுப்பாரா இல்லை அவருக்கு என்ன ஆயிற்று என்ற கேள்விக்கு விடை தெரியாமல் நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் வேறு வந்துவிட்டது. இதில் மக்கள் ஓட்டு நிச்சயம் பெரும் பங்களிக்கும் (பிக்பாஸ் சித்து விளையாட்டை தொடங்காத வரை!).

வாக்களிக்க மட்டும் வேணுமா
இந்த நிகழ்ச்சியில் உங்களுக்கு விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் என பிக்பாஸ் உரிமையுடன் கேட்கும் போது நமிதா ஏன் வெளியேறினார் என்பதை சொல்லலாமே? வாக்களிக்க மட்டும்தான் நமக்கு உரிமையா? நமிதா குறித்த விஷயத்தை பிக்பாஸ் சொல்லும் வரை நாமினேஷனுக்கு யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications