சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடைசியில் கஜா நிலை இப்படியாகி விட்டதே.. யானைக்கும் அடிசறுக்கும் என்பது இதுதானோ #GajaKaDost

Google Oneindia Tamil News

Recommended Video

    கடைசியில் கஜாவின் நிலைமை இப்படி ஆகிடுச்சே !-வீடியோ

    சென்னை: புயலையே கிண்டல் செய்யும் அளவுக்கு கஜாவின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே. இதுதான் யானைக்கும் அடி சறுக்கும் என்பதா.

    வங்கக் கடலில் கஜா புயல் உருவானது. இந்த புயல் முதலில் சென்னைக்கு என்று கூறப்பட்டது. எனினும் உருவான ஓரிரு நாட்கள் கழித்தே இது எங்கு மையம் கொண்டிருக்கிறது என்பது தெரியவந்தது.

    நிம்மதி

    நிம்மதி

    அந்த வகையில் கஜா கடலூருக்கும் நாகைக்கும் இடையே கரையை கடக்கிறது. இந்நிலையில் கஜாவை வைத்து பல மீம்ஸ்கள் உலவி கொண்டிருக்கின்றன. மேலும் கஜா சென்னைக்கு வராததை அடுத்து மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    கடலூருக்கு

    கடலூருக்கு

    சென்னை வந்தாதான் அது புயலா. கஜா சென்னைக்கு வராட்டியும் தமிழகத்தில் உள்ள கடலூருக்குத்தானே செல்கிறது. அந்த மக்களும் மழை, புயல் காற்றால் பாதிப்பை சந்திப்பார்கள் இல்லையா. இது அறியாமல் சென்னைக்கு வராததால் நிம்மதி பெருமூச்சு விடும் மனநிலை மாறவேண்டும்.

    உண்மை

    உண்மை

    மேலும் புயல் என்று கூட பாராமல் அதை கிண்டல் செய்வதா. சென்னையில் வெயில் காய்ந்து வருவதால் கஜா புயல் குறித்து இன்னும் கிண்டல் செய்து மீம்ஸ்கள் உலவி வருகின்றன. புயல் என்பதே தெரியாமல் சென்னையில் புழுக்கம் இருப்பது உண்மைதான். அதற்காக இப்படியா கிண்டல் செய்வது.

    பழமொழி

    இந்த நிலையில் #GajaKaDost என்ற ஹேஷ்டேகும் வைரலாகி வருகிறது. ஒரு புயல் வலுவாகி அதன் வேலையை காட்டத் தொடங்கினால் எத்தனை பாதிப்புகள் இருக்கும் என்பதை அறியாமல் கிண்டல் செய்வதை பார்க்கும்போதும் சென்னையில் வெயில் அடிப்பதை பார்க்கும் போதும் யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. புயலுக்கு பயந்த காலம் போய் அதையே கிண்டல் செய்யும் அளவுக்கு வந்துவிட்டோம்.

    English summary
    Netisans shared their comments on Cyclone Gaja as it didnt come to Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X