Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீமானின் அழைப்பை ஏற்று தாய்மதம் திரும்பும் ​தறி வாத்தியார் மகன்...... வைரலான ஒரு நெட்டிசனின் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர்கள் இந்துக்கள் அல்ல. சைவம், மாலியம் (வைணவம்) திரும்ப வேண்டும் என்று பேசியிருந்தார். அத்துடன் கிறிஸ்தவமும் இஸ்லாமும் வெளிநாட்டு மதங்கள் என கூறியிருந்தார். இது மிகப் பெரிய சர்ச்சையானது.

Recommended Video

    கிருஸ்தவர்கள், முஸ்லிம்களை இந்து மதத்திற்கு அழைத்தாரா சீமான்? என்ன பேசினார்? முழு வீடியோ

    இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீமான், கிறிஸ்தவர்களை, இஸ்லாமியர்களை தாய்மதத்துக்கு திரும்புமாறு நான் அழைக்கவில்லை.. நான் மதம் பரப்ப வந்தவன் அல்ல. இனத்தைப் பரப்ப வந்தவன் என விளக்கம் அளித்திருந்தார்.

    இந்நிலையில் சீமானின் தாய்மதம் திரும்புதல் தொடர்பான சர்ச்சையை முன்வைத்து நெட்டிசன் ஒருவரது பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. தறி வாத்தியார் மகன் சீமானின் அழைப்பை ஏற்று தாய்மதம் திரும்பும் ......​ என்ற தலைப்பிலான அந்த பதிவு இது:

    Netizen Post goes viral on Seemans Ghar wapsi speech


    நான் நா. ச. லூர்துராஜ் பேசுகிறேன் ​

    ​அண்ணன் சீமான் விடுத்த அறைகூவலை கேட்ட பின்பு இரண்டு நாளாக தூக்கம் தொலைந்து விட்டது . அரேபியாவிலிருந்தும் ​ , ஐரோப்பாவிலிருந்தும் வந்த மதங்களுக்கு போன தமிழர்களை , தாய் மதத்திற்கு திரும்ப சொல்லி அழைக்கும் அந்த பாச குரலுக்கு எப்படி பதில் சொல்ல போகிறேன் என்ற படபடப்பு தொற்றிக்கொண்டது .​

    தற்சமயம் ஏழு சதவீத மக்களின் ஏகோபித்த தலைவரின் குரலுக்கு , மீதமுள்ள தொண்ணூற்று மூன்று சதவீத ஜனங்களில் ஒருவனான நான், ஐரோப்பாவிலிருந்து வந்த கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் நான் , அவர் பாச குரலுக்கு பதில் சொல்லும் வகையில் , ​ அவர் சொன்ன தாய் மதம் நோக்கி கிளம்பி விட்டேன் , ​

    பல ​ வருடங்களுக்கு முன்னால்,ஒரு தாசில்தார் , நான் ஜாதி சான்றிதழ் வாங்க போன சமயத்தில் ​ தாசில்தார் முன் நான் நின்றபோது ​ மேலும்கீழுமாக என்னை பார்த்த தாசில்தார் ​ "மதம் மாறிய ​ கிறித்தவர் " என்று இருக்கிறதே எப்பொழுது மாறினாய் ​ ?? "என்றார் ​

    "எனக்கு தெரியாது சார்" என்றேன் ​
    "உங்க அப்பாவுக்கு தெரியுமா??" ​

    "அவருக்கும் தெரியாது சார்" ​
    "உங்க தாத்தாவுக்கு ?" அவர் பேச்சில் நக்கல் கூடியது.​

    அந்த கணம் " தளபதி " படத்தில் ரஜினி போலீஸ் ஸ்டேஷனில் பதில் சொன்னது போல சொல்ல வேண்டும் என்று இரத்தம் ​ சூடானது . ஆனால் அந்த இடம் அவர் கை ஓங்கி இருக்கும் அவருடைய வனம். ஒன்றும் செய்யமுடியாது . ​

    இதற்குள்ளாக , எங்கள் ரயில்வே குடியிருப்பில் இருந்த ஒரு இஸ்லாமிய அண்ணன் , அந்த அலுவலகத்தில் அதிகாரியாக இருப்பவர் , இந்த சம்பாஷணைகளை , தொலைவிலிருந்து பார்த்து விட்டு , அந்த மேசையின் அருகில் வந்து , என்னை " நீ வீட்டுக்கு போடா நான் வாங்கிட்டு வந்து அப்பாகிட்ட கொடுக்கிறேன்" என்று அனுப்பி வைத்தார்.​
    . ​
    "சார் ​ அவனோட அப்பா என்னோட வாத்தியார் , அவன் மாஸ்டர் டிகிரி பண்றதுக்கு , ஸ்காலாஷிப்புக்காக சர்டிபிகேட் வாங்க வந்திருக்கான் " என்று அந்த அண்ணன் சொன்னவுடன் தாசில்தார் பார்த்த பார்வை என் முதுகை சுட்டது. ​

    என் முப்பாட்டன் மதம்மாறியதற்கான காரணம் அவருக்கும் புரிந்திருக்கும் .​

    ​சீமானின் குரலுக்கு செவி மடுத்து , அவசரஅவசரமாக , தாய்மதம்நோக்கி கிளம்பும் போது, என் கால்களை ஏதோ இடறியது . ​

    Netizen Post goes viral on Seemans Ghar wapsi speech

    குனிந்து எடுத்து பார்க்கிறேன் , ​

    அது என் ​ கல்வி அறிவு , ஞானம் , பட்டம், பதவி , சமூக அந்தஸ்து , நெஞ்சை உயர்த்தி நடக்கும் கம்பீரம் ​ , அத்தனையையும், என்னிடமிருந்து எதையும் கேட்காமல், எதையும் எதிர் பார்க்காமல் ​ கிறித்தவ நிறுவனங்கள் ​ சேர்த்து தந்தது .​

    அண்ணனின் குரலுக்கு மதிப்பு கொடுத்து , கிறித்தவ நிறுவனங்களில் ​ பெற்ற அறிவையெல்லாம் தெருவில் எறிந்துவிட்டு , தாய் மதம் நோக்கி திரும்ப ​ எத்தனிக்கும் லட்சோப லட்ச இளைஞர்களுக்கு முன் உதாரணமாக நானும் , எல்லாவற்றையும் குப்பையில் வீசிவிட்டு , நடக்க முயன்றபோது .....​

    மறுபடியும் ஏதோ தடுத்தது ​

    குனிந்து பார்க்கிறேன் ,​

    இது நாள் வரை நான் தின்ற சோறு , என் குடும்பம் சுவாசித்த காற்று , மானம் காத்த உடை , மழையிலும் குளிரிலும் பதுங்கி கொள்ள உறைவிடம் , இவையனைத்தையும் தந்தது , என் மதத்தையோ ஜாதியையோ கேட் காத ஒரு முஸ்லீம் நாடு . ​

    அறிவு கொடுத்தவன் கிறித்தவன் , ஆகாரம் கொடுத்தவன் இஸ்லாமியன் . ​

    எல்லாவற்றையும் விட்டு விட்டு , ஒரு முழ கோவண துணியோடு , என் வீட்டு பிள்ளைகளை பட்டினி பசியோடு , " ஆண்டை வீட்டு வாசலில் " நாய்களைப்போல ​ ஒரு வாய் சோத்துக்கு குடும்பத்தோடு காத்து கிடப்பதற்காகவா நாங்கள் தாய் மதம் திரும்ப வேண்டும் சீமான் அவர்களே ?????.​

    என் தலைமுறைக்கு இது தொடரக்கூடாது என்றுதான் , என் முப்பாட்டன் , உன் தாய் மதத்தை விட்டொழித்து வெளியில் வந்தார் . யாருக்கோ நீங்கள் அதை தொடர்ப்பார்க்கிறீர்கள்.. வேடிக்கை கூத்து. உங்க சித்து விளையாட்டு இங்கே செல்லாது . ​

    மிஸ்டர் சீமான் ​ , உங்களுக்கு ஒன்று தெரியுமா ? கழுத்தில் சிலுவைப்போட்டால் தான் கல்விக்கூடத்தில் ​ இடம் என்றும் ​ , முடித்து விட்டு போகின்றவர்கள் , நெற்றியில் சிலுவையை பச்சை குத்தி கொண்டால் தான் பட்டம் கிடைக்கும் என்று கிறித்தவ நிறுவனங்கள் நிர்ப்பந்தித்திருந்தால் , பாதி தமிழ் நாட்டில் பச்சை குத்திருப்பதை பார்த்திருக்க முடியும் , ​

    ஒரே ஒரு நிறுவனம் கூட ஒருவரையும் அவ்வாறு கேட்டு கொண்டதில்லை .இன்னும் சொல்ல போனால் ஒரு கிறித்தவரையே கூட , கிறித்துவத்தை பின்பற்ற வற்புறுத்துவதில்லை .​

    அவர்களுக்கு கிறிஸ்தவத்தின் ​ அடையாளங்களை வாரி தெளிப்பதில் கவனமில்லை , நாறி போய் கழிவுகளாக கிடைக்கும் மனிதர்களை கழுவித்துடைத்து சமுதாயத்தில் தூக்கி நிறுத்துவதை அர்ப்பணிப்போடு செய்பவர்கள் ​ என்பது , அங்கு படித்த , பணிபுரிகின்ற எல்லா மதத்தவனுக்கும் ​ தெரியும்.​

    வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி திரியும் குறிக்கோளற்ற ​ அரசியல்வாதிகளுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை . ​

    இஸ்லாத்தை பின்பற்றினால் மட்டுமே ,இங்கு நீ சம்பாதிக்க முடியும் என்ற ஒரு கட்டளையை வளைகுடா நாடுகள் விதித்திருக்குமேயானால் , இந்தியாவில் பெருவாரியான இஸ்லாம் சகோதரர்களை பார்த்திருக்க முடியும் . ​

    பாரதி பாடிய பறையருக்கும் புலையருக்கும் விடுதலை என்ற சமத்துவத்தை இந்த இஸ்லாமிய நாடுகளில் பரிபூரணமாக உணர முடியும் . ​
    மாமிசமுண்ட தட்டை கழுவும் இஸ்லாமிய நண்பருக்காக ​ , ஆச்சாரம் மிகுந்த பிராமணன் காத்திருக்கும் காட்சியும் , சைவ மனிதர்களுக்கு சங்கடம் வரக்கூடாது என்பதற்காக , அசைவைத்தை மறைத்து உண்ணும் , மனித நேயத்தின் மாட்சியை இந்த தேசத்தில் ஒவ்வொரு நாளும் பார்க்கலாம் . ​

    "மதம்" என்பது உங்களைப்போன்ற அரசியல்வாதிகளுக்கு , மக்களை பிரித்து கலவரம் செய்ய கிடைத்த காரணங்கள் ​

    ஆனால் , "மதம்" என்பது ​ ​ "மனிதம்" ​ என்று புரிந்து கொண்டவர்கள் இந்த தேசத்தை ஆள்பவர்களும் வாழ்பவர்களும். ​ ​

    உழைத்து வாழ்பவர்கள் , ஆன்மீகவாதிகள் ,மதவாதிகள் இல்லை, ​

    மதம் என்பது ஒரு மார்க்கம் ,வாழ்வியல் முறை , அதில் தந்தை என்றும் தாய் என்றும் குளறுபடி இல்லை ​ ​

    ஆன்மீக வாதிகளுக்கு தாய் மதம் என்றும் தந்தை மதம் என்றும் பிரிவினை கிடையாது , ​

    அங்கிங்கெனாதபடி எங்கும்பிரகாசமான பரம்பொருளே இறைவன் ​ ​

    ஆன்மீகவாதிகளுக்கு , எந்த கடவுளின் மீதும் விரோதமில்லை .​
    எந்த கடவுளுக்கும் , மதவாதிகளுக்கும் தொடர்பில்லை ​

    வளர்ந்து கொண்டிருக்கும் நீங்கள் , வாயால் , இருப்பதை இழந்து விட்டு தெருவுக்கு வந்துவிடாதீர்கள் ​. இவ்வாறு அந்த நெட்டிசன் எழுதியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+