Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஜினி சீரியஸாக பேசும் போது.. அடுத்த படத்துக்குன்னு சொல்லிட்டு கிளம்புங்க.. அதிர வைத்த பெரியவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, யோகி ஆதித்யாநாத் காலில் விழுந்தது குறித்து பலரும் கேள்வி எழுப்பினார்கள். அப்போது ரஜினி சீரியஸாக பேசிக்கொண்டிருந்த போது, பக்கத்தில் இருந்த பெரியவர், 'அடுத்த படத்துக்குனு சொல்லிட்டு கெளம்புங்க' என்று கூறுவார். இதை மட்டும் கட் செய்து நெட்டிசன் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு படம் வெளியான பின்னர் இமயலைக்கு போவது வழக்கம். வழக்கமாக இமயமலைக்கு மட்டும் தான் சென்று வருவார். இந்த முறை 'ஜெயிலர்' படம் வெளியான பிறகு இமயமலைக்கு சென்றார். அதனை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கும் சென்று வந்தார். அயோத்தியில் ராமர் கோயிலுக்கு சென்றவர், லக்னோவில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத்தையும் சந்தித்தார்.

netizens are trolling rajinikanth press meet yesterday in chennai airport

உத்தரப்பிரதேசத்தில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுடன் 'ஜெயிலர்' சிறப்புக் காட்சியை கண்டு ரசித்தார். அத்துடன் உத்தரப்பிரதேச எதிர்க்கட்சி தலைவரான சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் சிங் யாதவை சந்தித்ததார். அத்தடன் உத்தரப்பிரதேசத்தில் அமைச்சராக உள்ள ராஜா பைய்யா எனும் ரகுராஜ் பிரதாப் சிங்கை (53) சந்தித்தார். இவர் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக பார்க்கப்படுகிறார். டிஎஸ்பியை கொன்றதாக கொலை குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளது. ராஜா பைய்யாவை ரஜினி சந்தித்தது ஏன் என்பது பெரும் விவாதமாக ஊடகங்களில் பேசப்படுகிறது.

இது ஒருபுறம் எனில் நடிகர் ரஜினிகாந்த் தனது பயணத்தின் போது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது பெரும் சர்ச்சையானது. யோகியின் காலில் ரஜினிகாந்த் விழுந்து ஆசி பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரிய அளவில் விவாதம் ஆனது. இந்த வீடியோவை பகிர்ந்த பலரும் ரஜினிகாந்த் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். ஏனெனில் காலா படத்தின் போது, அம்மா, அப்பா, குரு, பெரியர்கள் காலில் விழலாம். பணம், பதவி, அதிகாரம் உள்ளவர்களின் காலில் விழக்கூடாது என்று ரஜினி தான் பேசியிருப்பார். அந்த வீடியோவை சுட்டிக்காட்டியே ரஜினியை கடுமையாக பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

இதனிடையே, நேற்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் பேசும் போது, "நான்கு வருடங்கள் கழித்து இமயமலை சென்றுவந்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பயணம் மிக நன்றாக அமைந்திருந்தது ஜெயிலர் படத்தை வெற்றி படமாக்கிய தமிழக மக்களுக்கு என் நன்றிகளைதெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் தயாரிப்பாளர், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகிய படக்குழுவுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

அப்போது ரஜினியிடம் யோகி ஆதித்யாநாத் காலில் விழுந்தது ஏன் என்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரஜினி, , "முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து நட்பு ரீதியான சந்திப்பு மட்டுமே. இதை தவிர வேறு ஒன்றும் அந்த சந்திப்பில் கிடையாது. சந்நியாசி ஆகட்டும், யோகிகள் ஆகட்டும் அவர்கள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். நான் அதை தான் செய்தேன்" என்றார். ரஜினிகாந்த் அப்போது சீரியஸாக பேசி பதில் அளித்துக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு பெரியவர், அடுத்த படத்துக்குனு சொல்லிட்டு கெளம்புங்க என்று கூறினார். அதை மட்டும் கட் செய்து பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

அந்த பெரியவர் வேறு யாரும் இல்லை, ஒரு பிரபல பழம்பெரும் ஒரு கட்சியின் டிவி சேனலின் நிருபர்தான். விஜயகாந்த்திடம் ஏர்போர்ட்டில் வாக்குவாதம் செய்ததால் தேமுதிக தொண்டர்களின் கோபத்திற்கு ஆளானவர் இவர். இப்போது ரஜினியை நைஸாக நிருபர்களின் கேள்விக்கணைகளிடமிருந்து தப்புவிக்க இப்படி ஐடியா கொடுத்திருப்பார் போல. ஆனால் ரஜினி காதில் அவர் சொன்னது விழவில்லை, அல்லது கவனிக்க வேண்டாம் என விட்டுவிட்டார். ரஜினி, பிற நிருபர்களின் கேள்விகளை உன்னிப்பாக கவனித்து பதில் அளிப்பதில் கவனமாக இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+