திருமாவளவன்...அந்த ஒற்றை மனிதரின் வெற்றிக்காக உறங்காதிருந்த ஜனங்கள்... நெகிழும் பதிவுகள்!
Recommended Video
சென்னை: ஜாதியம் கோரத்தாண்டவமாடும் தமிழக மண்ணில்தான் அப்படி ஒரு நெகிழ்வு நிகழ்வுகளும் நடந்துள்ளது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் வெற்றிக்காக நள்ளிரவைத் தாண்டியும் சமூக வலைதளங்களில் காத்திருந்து பதிவுகளை போட்டுக் கொண்டே இருந்தனர்.
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் தலித்துகள் கணிசமாக உள்ளனர். அதே நேரத்தில் வன்னியர்களும் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். இத்தொகுதியில் ஏற்கனவே வெற்றி பெற்று எம்.பி.யாக பணியாற்றியவர் தொல். திருமாவளவன்.

திருமாவளவன் முன்னிலை
இம்முறை திமுக கூட்டணியில் பானை சின்னத்தில் போட்டியிட்டார் திருமாவளவன். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் திருமாவளவன் முன்னிலையில் இருந்தார். ஆனால் ஒருகட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தையே தேர்தல் அதிகாரிகள் வெளியிடாமல் இருந்தனர்.

சமூக வலைதளங்களில் விவாதம்
இதனால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. திருமாவளவன் தோற்றார் என அறிவிக்க சதி நடப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியது. நேற்று பகலில் தொடங்கிய இந்த விவாதம் நள்ளிரவைத் தாண்டியும் நீடித்தது.

ஒத்த மனுசனுக்காக மொத்த சனமும்
திருமாவளவன் வெல்ல வேண்டும் என்கிற விருப்பத்துடன் பல நூறு பதிவுகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுக் கொண்டிருந்தன. ஒத்த மனுசனின் வெற்றிக்காக மொத்த சனமும் விழித்திருக்கிறது என்றெல்லாம் நெகிழ்ச்சியான பதிவுகள் விழுந்து கொண்டிருந்தன.

வென்ற திருமாவளவன்
நள்ளிரவைத் தாண்டித்தான் திருமாவளவன் வென்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது தொடங்கி இன்னமும் திருமாவளவனின் வெற்றியை தங்களது சொந்த வெற்றியாக கொண்டாடி மகிழ்கின்றனர் அவரது நேசத்துக்குரியவர்கள்!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications