அடையாறு மத்திய கைலாஷ் மேம்பாலம் கட்டியதே வீணாகிடும்.. நெட்டிசன் சொன்ன முக்கியமான பாயிண்ட்
சென்னை: சென்னை அடையாறு மத்திய கைலாஷ் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த பாலம் குறித்து நெட்டிசன் ஒருவர் தெரிவித்த கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அவர் இதுபற்றி கூறுகையில், "கிண்டியில் இருந்து ராஜிவ்காந்தி சாலைக்கு போவோர் பாலத்தில் மட்டுமே ஏறவேண்டும், தவறாக கீழே வந்தால் சிக்னல் தாண்டி யு டர்ன் எடுக்க வேண்டும் என வைத்தால் மட்டுமே இந்தப் பாலம் பயன் தரும். கீழேயும் திரும்பலாம் என இருந்தால் மீண்டும் அடையாறு- கிண்டி வாகனங்கள் அம்பிகா அப்பளத்தில் இருந்து ஊர்ந்து போகும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள ராஜீவ் காந்தி சாலையானது மத்திய கைலாஷ் பகுதியில் சா்தாா் படேல் சாலையில் இருந்து துவங்குகிறது. இந்த 2 சாலைகளும் சந்திக்கும் இடம் 'டி' வடிவில் இருக்கும் இச்சாலை சந்திப்பில் வாகனங்கள் சிரமமின்றி கடந்து செல்வதற்கு, சா்தாா் படேல் சாலையிலிருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு செல்லும் வாகனங்கள் இம்மேம்பாலத்தை பயன்படுத்தும் வகையில் எல் வடிவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 'எல்' வடிவ மேம்பாலத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இந்த பாலம் இருவழித்தடம் அகலம் கொண்டதாகவும், ஒரு வழி வாகனப் போக்குவரத்து கொண்டதாகவும், 652 மீ. நீளம் கொண்டதாகவும், ரூ.61 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் திறக்கப்பட்டுள்ளதால் இனி நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த பாலம் குறித்து நெட்டிசன் ஒருவர் தெரிவித்த கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

நெட்டிசன் கருத்து
அவர் இதுபற்றி கூறுகையில், "நல்லவேள..ரொம்ப sharp curve ஆ இல்லை. நாளையில் இருந்து இதை செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். கிண்டியில் இருந்து ராஜிவ்காந்திசாலைக்கு போவோர் பாலத்தில் மட்டுமே ஏறவேண்டும், தவறாக கீழே வந்தால் சிக்னல் தாண்டி u turn எடுக்கவேண்டும் என வைத்தால் மட்டுமே இந்தப் பாலம் பயன் தரும். கீழேயும் திரும்பலாம் என இருந்தால் மீண்டும் அடையாறு- கிண்டி வாகனங்கள் அம்பிகா அப்பளத்தில் இருந்து ஊர்ந்து போகும் நிலை ஏற்படும். பார்ப்போம் " இவ்வாறு கூறியுள்ளார்.
என்ன சிக்கல்
மத்திய கைலாஷ் சந்திப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் குறித்து அந்த நெட்டிசன் கூறியுள்ள கருத்து மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் அங்குள்ள போக்குவரத்து நடைமுறையில் சிறிய தவறு நடந்தாலும் ஒட்டுமொத்தப் பாலத்தின் நோக்கமே சிதைந்துவிடும்.
அவர் ஏன் அப்படி கூறினார் மற்றும் அங்குள்ள சிக்கல்கள் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்:
மத்திய கைலாஷ் சந்திப்பு என்பது கிண்டி, அடையாறு மற்றும் ஓஎம்ஆ ஆகிய மூன்று முக்கிய சாலைகள் இணையும் இடம். குறிப்பாக, கிண்டியில் இருந்து ஓஎம்ஆர் (ராஜீவ் காந்தி சாலை) நோக்கிச் செல்லும் வாகனங்கள் அதிக அளவில் இருப்பதால், அங்கு எப்போதும் நெரிசல் அதிகமாக இருப்பது வழக்கமான ஒன்று தான்.
நெட்டிசன் சொல்லும் முக்கியமான பாயிண்ட்
கிண்டியில் இருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறிச் செல்லாமல், கீழே சாலையிலேயே நேராக வந்து இடதுபுறம் திரும்ப (ஓஎம்ஆர் நோக்கி) அனுமதித்தால் என்ன ஆகும்? அடையாறு - கிண்டி போக்குவரத்து அடியோடு முடங்கும்... ஏனெனில் அடையாறில் இருந்து கிண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் 'நேராக' செல்ல வேண்டும். அதே நேரத்தில் கிண்டியில் இருந்து வரும் வாகனங்கள் கீழே சாலையிலேயே இடதுபுறம் திரும்ப முயன்றால், இந்த இரண்டு வாகன ஓட்டங்களும் சந்திப்பின் மத்தியில் ஒன்றை ஒன்று குறுக்கிடும் அபாயம் அதிகம் ஆகும்.
புதிய பாலம்.
— நர்சிம் (@narsimp) February 15, 2026
😍
நல்லவேள..ரொம்ப sharp curve ஆ இல்ல. நாளையில் இருந்து இதை செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.
கிண்டியில் இருந்து ராஜிவ்காந்திசாலைக்கு போவோர் பாலத்தில் மட்டுமே ஏறவேண்டும், தவறாக கீழே வந்தால் சிக்னல் தாண்டி u turn எடுக்கவேண்டும் என வைத்தால் மட்டுமே இந்தப் பாலம் பயன்… pic.twitter.com/FkFwzjFpl0
அம்பிகா அப்பளம் வரை டிராபிக் ஜாம்: இதனால் அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் அம்பிகா அப்பளம் கடையைத் தாண்டும் முன்பே நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
தீர்வு - மேம்பாலம் மட்டுமே
நெட்டிசன் குறிப்பிடுவது போல, கிண்டியில் இருந்து ஓஎம்ஆர் செல்பவர்கள் 100% பாலத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என விதிகள் கடுமையாக்கப்பட வேண்டும். ஒருவேளை யாராவது பாலத்தில் ஏறாமல் கீழே வந்துவிட்டால், அவர்கள் சிக்னலில் இடதுபுறம் திரும்ப அனுமதிக்கக் கூடாது. அவர்கள் நேராக அடையாறு நோக்கிச் சென்று அங்கிருந்து 'U-turn' எடுத்து வரவேண்டும் என வைத்தால் மட்டுமே ஓட்டுநர்கள் பாலத்தைப் பயன்படுத்தப் பழகுவார்கள்.
"Sharp Curve" ஏன் ஒரு சிக்கல்
அவர் "நல்லவேளை sharp curve ஆக இல்லை" எனக் குறிப்பிட்டதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில் சென்னை போன்ற பெரிய வாகன நெரிசல் உள்ள நகரத்தில் மேம்பாலங்களில் வளைவுகள் மிகக் குறுகலாக இருந்தால், கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் திரும்பும்போது வேகம் குறையும். இது பாலத்தின் மேலேயே ஒரு 'பாட்டில் நெக்' நெரிசலை உருவாக்கிவிடும். வளைவு சீராக இருப்பதால் வாகனங்கள் தடையின்றி வேகமாக ஓஎம்ஆர்-க்குள் நுழைய முடியும். மேம்பாலம் என்பது வாகனங்களைச் சந்திப்பின் தரைப்பகுதிக்குக் கொண்டு வராமல் 'பை-பாஸ்' செய்வதற்கே. கீழே வாகனங்கள் திரும்ப அனுமதிக்கப்பட்டால், பழையபடி சிக்னல் நெரிசல் தொடரும் என்பதுதான் நெட்டிசன் சொல்லவரும் எச்சரிக்கை ஆகும்.
-
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை!












Click it and Unblock the Notifications