சென்ட்ரல் டூ கோயம்பேடு மெட்ரோவில் 30 ரூபாய்.. ஆனால் அங்கிருந்து வீடு 2 கிமீ.. ஆட்டோவில் 150 ரூபாய்
சென்னை: பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என்றும், ஆன்லைன் அபராதத்திலிருந்து ஆட்டோவிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும். 12 வருடமாக உயர்த்தப்படாத மீட்டர் கட்டணத்தை நீதிமன்ற உத்தரவுப்படி உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னையில் வரும் மார்ச் 19ம் தேதி ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் டூ கோயம்பேடு மெட்ரோவில் 30 ரூபாய் தான், ஆனால் கோயம்பேட்டில் இருந்து வீடு 2 கிமீக்கு ஆட்டோவில் 150 ரூபாய் என்று நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள்.
பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என்றும், ஆன்லைன் அபராதத்திலிருந்து ஆட்டோவிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும். 12 வருடமாக உயர்த்தப்படாத மீட்டர் கட்டணத்தை நீதிமன்ற உத்தரவுப்படி உயர்த்த வேண்டும், அரசின் ஆட்டோ செயலியை உடனே துவக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் இணைந்து போராட்டத்தை அறிவித்துள்ளன.இதன்படி வரும் மார்ச் 19ம் தேதி சென்னையில் ஆட்டோக்கள் எதுவும் ஓடாது என்று அறிவித்துள்ளன.

ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கையான பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்..ஏனெனில் ஆட்டோக்களில் ஏறினால் அரை கிலோமீட்டர் என்றாலும் 100 ரூபாய் கேட்பதாகவும், 2கிலோ மீட்டர் தூரம் கூட இல்லாத இடங்களுக்கு கூட 150 ரூபாய் முதல் சில நேரங்களில் 200 ரூபாய் வரை கேட்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.
நெட்டிசன் ஒருவர் இதுபற்றி வெளியிட்டுள்ள பதிவில், ஒரு கிலோ மீட்டர்கூட இல்ல. 100 ரூபாய் என்கிறார்கள் . "என்னண்ணா" னு கேட்டா "மினிமமே 100தான். இஷ்டம்னா வா"ன்னுட்டு போய்விட்டார். உண்மையில் அதே வழியாதான் ஆட்டோ சும்மா போகிறது. யூடர்ன்கூட அதைத்தாண்டிதான். புரியவேல்ல. இதில் இரண்டு கிலோமீட்டருக்கு மினிமம் 50 ஆக்குங்கனு கேட்டுட்டு இருக்காங்க. அப்படி ஆக்கினா எவ்ளோ கேட்பாங்க என்று தெரியவில்லை..
இன்னொரு நெட்டிசன் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை சென்ட்ரலில் இருந்து இருந்து கோயம்பேடு மெட்ரோ 30 ரூபாய் கோயம்பேடு மெட்ரோவில் இருந்து எங்கள் வீடு (2 கிமீ) 150 ரூபாய் ஆட்டோவில்.. கையில் பைகள் மட்டும் இல்லை என்றால் நடந்தே போயிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
மூன்றாவதாக ஒரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், ஆட்டோவிற்கான ஆப்பில். 76 ரூபா காட்டினதுக்கு 150 வேண்டும் என்று கேட்டார்கள். இதெல்லாம் நியாயமானு கேட்டேன். 70 ரூபாய், 80 ரூபாய்க்கு நாங்கள் ஏன் ஓட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். மேலும் முடிஞ்சா வா இல்லைனா கேன்சல் பண்ணிட்டு போ என்றார் என்று கூறியிருந்தார்.இன்னொரு நெட்சனோ, ஆட்டோவிற்கு ஆப்களில் காட்டுவதைவிட எப்போதுமே அதிகமாகவே கேட்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். ஆப்பில் காட்டுவதைவிட 50 ரூபாய் முதல் 100 ரூபாய் அதிக கட்டணம் தருவதாக இருந்தால் மட்டுமே வருவோம் என்று போனில் தனியாக பேசுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார். அதேநேரம் பைக் டாக்ஸில் கட்டணம் மிக குறைவாக இருப்பதால் எளிதாக பயணிக்க முடிகிறது என பல பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications