பெரும்பாக்கத்தில் 1600 குடும்பங்கள் போய் வர உள்ள ஒரே சாலை.. தாம்பரம் மாநகராட்சிக்கு கோரிக்கை
சென்னை: சென்னையில் ஐடி நிறுவனங்கள் ஓஎம்ஆர் பகுதியை ஓட்டி பல்வேறு குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. ஆனால் அதற்கு ஏற்ற வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என்ற புகார்கள் உள்ளது. குறிப்பாக மேடவாக்கம், பெரும்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். சாலை வசதிகள், வடிகால் வசதிகள் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அந்த வகையில் பெரும்பாக்கம் பகுதியில் சாலைகள் மிக மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டி நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் வளர்ந்த வேகத்திற்கு, அங்குள்ள பகுதிகளில் சாலைகள், வடிகால் வசதிகள், குடிநீர் இணைப்பு வசதிகள், பாதாள சாக்கடை வசதிகள் இன்னும் தரமானதாக கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது. உதாரணமாக அம்பத்தூர், மடிப்பாக்கம், மணலி போன்ற பகுதிகள் 2011ம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட போதிலும், அவர்கள் பல ஆண்டுகளாக சரியான சாலையோ, உள்கட்டமைப்பு வசதிகளோ, பாதாள சாக்கடை வசதிகளோ கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தார்கள்.

அதேபோல் மழைநீர் வடிகால் வசதிகளும் பெரிய அளவில் இல்லாத காரணத்தால் மழை நீர் தேங்குவதும் அடிக்கடி நடந்து வந்தது. ஆனால் இந்த நிலை படிப்படியாக மேம்படுத்தப்பட்டது. மடிப்பாக்கத்தை பொறுத்தவரை ஓரளவு மேம்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளிலும் மேம்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ஆனால் முழுமையாக பணிகள் முடிந்து நங்கநல்லூர் போலவோ, ஆயிரம் விளக்கு போலவோ மாறுவதற்கு இன்னும் சில காலம் தேவை என்கிற நிலை தான் இருக்கிறது.
15 வருடம் முன்பு இணைந்த பகுதிகளிலேயே இந்த நிலை என்றால், இன்னமும் சென்னையின் புறநகர் பகுதிகளாவே உள்ள பெரும்பாக்கம், மேடவாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் அகலமான சாலை வசதி, சாக்கடை வசதி, மழைநீர் வடிகால் வசதி, தரமான சாலை வசதி, குப்பை மேலாண்மை போன்றவை இன்னும் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் வைக்கப்பட்டு வருகிறது. இது வெறும் பெரும்பாக்கம், மேடவாக்கம் மட்டுமில்லை. சென்னையின் ஓஎம்ஆர் சாலையை ஒட்டியுள்ள பள்ளிக்கரணை தொடங்கி நாவலூர் வரை பல்வேறு பகுதிகளில் வைக்கப்படுகிறது. அந்த வகையில் சில நெட்டிசன்கள் வைத்த குற்றச்சாட்டுகளை பார்ப்போம்.
ஒரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில் கூறுகையில், பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனைக்கு அருகே உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமுள்ள ஒரே சாலையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சாலை 1600+ குடும்பங்களையும் ஒரு பெரிய பள்ளியையும் இணைக்கிறது, இருப்பினும் சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் தேங்கி நிற்கும் நீர் மற்றும் பள்ளங்களுடன் உள்ளதாக கூறியுள்ளார்.
Condition of the only access road to "Casagrand First City" near Global Hospital, Perumbakkam is alarming. This stretch connects 1600+ families and a major school, yet the road is in a severely damaged state with stagnant water and potholes.@chennaicorp @mkstalin @UpdatesChennai pic.twitter.com/AvQPfGYMd9
— Ananta Charan Swain (@anantacharan) October 15, 2025
அதேபோல் ஒரு நெட்டிசன், பெரும்பாக்கத்தில் உள்ள இன்னொரு சாலையின் நிலை என்று கூறியதுடன், பள்ளம் தோண்டியதால் இப்படி ஆகிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். அந்த சாலை சேறும் சிகதியுமாக இருக்கிறது.
இப்படி பெரும்பாக்கத்தின் பல்வேறு பகுதிகளை புகைப்படம் எடுத்து சாலைகளின் நிலையை இணையதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதில் பல நெட்டிசன்கள் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே இன்னொரு நெட்டிசன், பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி, இ சென்னையின் ஐடி-ஹப்களில் ஒன்று. பருவமழைக்கு முன் ஏரிகள் இப்படித்தான் இருக்கும் என்றால், தண்ணீர் எப்படி வடியும் என்று விமர்சித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications