ஶ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தியுடன் எத்தனை காங். தலைவர்கள் இறந்தனர்? ஜி.கே.வாசனுக்கு சுளீர் கேள்வி
சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் சிறையில் இருந்து உச்சநீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை விமர்சித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்திருந்தார். ஜி.கே.வாசனின் இந்த அறிக்கையை முன்வைத்து சமூக வலைதளங்களில் சரமாரியாக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஜி.கே.வாசன் வெளியிட்டிருந்த அறிக்கை: பேரறிவாளனின் விடுதலை சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பல்வேறு காரணங்களைக் கொண்டு சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது . அதே நேரத்தில் அந்த வழக்கில் சம்பந்தப்பட 7 பேரும் நிரபராதிகள் இல்லை என்பது , ஏற்கனவே நடந்த விசாரனையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளின் தீர்ப்பும் அமைந்துள்ளது .

ராஜீவுடன் 17 பேர்
முன்னாள் பாரதப் பிரதமர் இராஜீவ்காந்தியின் படுகொலை சம்பவத்தில் அவருடன் சேர்த்து 17 பேர்கள் , குறிப்பாக காவல்துறை அதிகாரிகளும் , காங்கிரஸ் தலைவர்களும் , தொண்டர்களும் இறந்துள்ளனர் . அவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளை , மனநிலையை தமிழகத்தை ஆளும் , ஆட்சியும் , கட்சியும் அதனை சார்ந்த கூட்டணி கட்சிகளும் உணர்ந்து செயல்படவேண்டும் . காரணம் சிறையில் உள்ள மற்ற 6 பேர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தங்களின் எண்ணத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள் .

காங். இரட்டை நிலை
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் , முன்னாள் பாரதப் பிரதமரின் கொடுரக் கொலை செயலில் ஈடுப்பட்ட பேரறிவாளின் விடுதலையில் உறுதியான , உணர்வுபூர்வமான நிலையை எடுக்காமல் , ஒருபுறம் ஒப்புக்கு போராட்டம் என்றும் மறுபுறம் பேரறிவாளின் விடுதலையை பாராட்டும் , கொண்டாடும் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி வைத்திருப்பது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டையையே எடுத்துக்காட்டுகிறது .

ஜிகே வாசன் எதிர்ப்பு
மேலும் கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் இந்த உணர்வுபூர்வமான பிரச்சனையில் வாய்மூடி வேடிக்கை பார்ப்பது பதவி நலனுக்காகவா ? அல்லது சுயநலனுக்காகவா ? அல்லது கூட்டணி நலனுக்காகவா ? என்று தெரியவில்லை . உண்மையிலேயே இராஜீவ்காந்தியின் கொலை சம்பவத்தை மறக்கவோ , மன்னிக்கவோ முடியாத நிலையில் இருப்பது உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் தான் என்பதை குறிப்பிட விரும்புகிறேன் . இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியிருந்தார். இந்த அறிக்கையை தமது சமூக வலைதளப் பக்கங்களிலும் ஜி.கே.வாசன் பகிர்ந்திருந்தார்.
Recommended Video

ஜிகே வாசனுக்கு சரமாரி கேள்வி
ஜி.கே.வாசனின் இந்த அறிக்கையை முன்வைத்து நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் சில: மு.கா. மணியரசன் என்ற நெட்டிசன், அய்யா ராஜூவ்வோடு எந்த காங்கிரஸ்காரர் படுகொலை ஆனார் அவர்கள் பெயர்கள பெரும்புதூர் நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ளதா?என கேள்வி எழுப்பியுள்ளார். Rps Travels என்பவ்ர் ஐயா அன்றைய பாரத பிரதமர் குண்டுவெடிப்பில் அன்று இறந்த போது நாட்டுக்காக பாடுபட்ட மற்ற தலைவர்கள் குண்டு வெடிப்பில் ஒருவரும் மரனிக்கவில்லையே ஏன் அன்று தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தவர் வரை ? என கேட்டுள்ளார். Meenakshi Sundaram என்பவர் ராஜிவ் படுகொலை ஆவார் என தெரிந்து அவரை வற்புறுத்தி பிரச்சாரத்துக்கு அழைத்து வந்தது மரகதம் சந்திர சேகர்,மூப்பனார் போன்ற காங்கிரஸ் காரர்கள் தான்! அவர்கள் ஏன் விசாரணை கமிஷனால் விசாரிக்கப்பட வில்லை! மர்ம முடிச்சுகள்! என குறிப்பிட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications