அடையாறு ஸ்டேசனின் அழகான ட்ரோன் வீடியோவை வெளியிட்ட தெற்கு ரயில்வே.. ஒரே பதிலில் ஆஃப் செய்த நெட்டிசன்
சென்னை: சென்னை அடையாறு இந்திரா நகர் ரயில் நிலையத்தின் வெளியில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் குறித்து தெற்கு ரயில்வே போட்ட சூப்பர் ட்ரோன் வீடியோ பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருந்தது. இதை பார்த்த நெட்டிசன் ஒருவர் கொடுத்த ஒரே பதில் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
சென்னை அடையாற்றில் உள்ள இந்திரா நகர் ரயில் நிலையம், ஐடி காரிடர் பகுதியான ஓஎம்ஆர் சாலையில் இருக்கிறது. ராஜீவ் காந்தி சாலையில் (ஓஎம்ஆர்) ஏராளமான ஐடி நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த பகுதி முழுவதும் மிகப்பெரிய வானுயர்ந்த கட்டிடங்களுடன் கலை நயமிக்கதாக இருக்கும். இங்கு பணிபுரியும் ஐடி நிறுவன ஊழியர்களுக்கு முக்கியமான போக்குவரத்தாக பறக்கும் ரயில் நிலையம் இருக்கிறது.

இந்திரா நகர் ரயில் நிலையத்தில் இறங்கிதான் ஏராளமான ஊழியர்கள் ஐடி நிறுவனங்களில் வேலைக்கு செல்கிறார்கள்.. இந்திரா நகர் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ராஜீவ் காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும். அந்த சாலையில் 10 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் மொத்த ஓஎம்ஆர் சாலையும் முடங்கிவிடும்.. அந்த அளவிற்கு கடுமையாக வாகன போக்குவரத்து உள்ள பகுதியாகும்.
தற்போது சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து தான் ரயில்கள் வந்து செல்கின்றன. மீண்டும் கடற்கரையில் இருந்து வந்து செல்லும் போது ஏராளமான பயணிகள் வந்து செல்வார்கள். அதன்பிறகு பறக்கும் ரயில் வழித்தடம், சென்னைக்கே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடமாக மீண்டும் மாறும்.

சென்னையின் முக்கியத்துவம் வாய்ந்த ரயில் நிலையங்களில் இந்திரா நகர் ரயில் நிலையமும் ஒன்று.. ஆனால் அங்கு அடிப்படை வசதிகள் பெரிய அளவில் மேம்படுத்தப்படவில்லை.. இந்திரா நகர் ரயில் நிலையம் மட்டுமின்றி, திருவான்மியூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், லைட் ஹவுஸ், மைலாப்பூர், மந்தைவெளி கோட்டூர்புரம், கஸ்தூரிபாய் நகர், தரமணி, பெருங்குடி வேளச்சேரி என எல்லா ரயில் நிலையகளையும் பெரிய அளவில் மேம்படுத்த வேண்டியது கட்டாயமாகும். ஆனால் போதிய அடிப்படை வசதிகள் இன்று வரை நிறைவேற்றப்படாத நிலை இருக்கிறது.
Witness the grand arrival at #India's artistic gem!
— Southern Railway (@GMSRailway) May 13, 2024
This #DroneVideo captures a train pulling into #IndraNagarStation in #Chennai, right next to the country's largest panoramic mural. A sight that blends modern marvels with artistic expression!
#DroneViews #PanoramicArt pic.twitter.com/tVnFGJe4BX
இந்நிலையில் சென்னை அடையாறு இந்திரா நகர் ரயில் நிலையத்தின் வெளிப்புறத்தில் கலைநயமிக்க புகைப்படங்கள் வரையப்பட்டுள்ளன. இது தொடர்பாக மிக அற்புதமான ட்ரோன் வீடியோ தெற்கு ரயில்வே நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர், ஸ்டேசனுக்குள்ளே எப்படி இருக்கு என்பதை உங்களால் காட்ட முடியுமா.. அந்த ரயில் நிலையத்தில் எதுவுமே சரியாக இல்லை.. அந்த ரயில் நிலையத்தின் பராமரிப்பை முற்றிலும் கைவிட்டுவிட்டீர்களே" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications