அவங்களா.. இப்படி ஆளே மாறிட்டாங்களே! கனிமொழி வீட்டில் நாடாளுமன்ற எம்.பி. 'சகாக்கள்'!
சென்னை: திமுக மகளிர் உரிமை மாநாட்டுக்கு வருகை தந்த பெண் எம்.பிக்கள் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி வீட்டுக்கு சென்ற எடுத்த படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
திமுக மகளிர் அணி சார்பாக கலைஞர் நூற்றாண்டு- மகளிர் உரிமை மாநாடு சென்னையில் கடந்த 14-ந் தேதி நடைபெற்றது. இம்மாநாட்டில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, சமாஜ்வாதி கட்சி எம்பி அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ், ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, இடதுசாரித் தலைவர் ஆனி ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற லோக்சபாவில் கனிமொழிக்கு அருகே அமர்ந்திருப்பவர்கள் சுப்ரியா சுலே, டிம்பிள் யாதவ். கனிமொழி பேசும் போது பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டால் அவருக்கு ஆதரவாக வரிந்து கட்டி வரும் படைதளபதி போல சுப்ரியா சுலே ஆவேசம் காட்டுவார். கனிமொழியின் பேச்சுகளை லோக்சபாவில் பாராட்டுவார். சென்னை மாநாட்டில் பேசும் போதும் முதல்வர் ஸ்டாலின் அண்ணா, துர்கா அண்ணி என உரிமையோடு பேசினார் சுப்ரியா சுலே. தமது தங்கை ஈரோடு மாப்பிள்ளையை திருமணம் செய்திருப்பதையும் தமிழ்நாட்டு மல்லிகை பூவின் வாசனையையும் சுட்டிக்காட்டி சிலாகித்து பேசினார் சுப்ரியா சுலே. நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்பிக்கு ஆதரவாக பேசியதையும் தம்மை சுற்றி எப்போதும் திமுக எம்பிக்கள்தான் இருப்பார்கள் எனவும் நெகிழ்ந்து பேசினார் சுப்ரியா சுலே. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே.
தற்போது சமூக வலைதளங்களில் சுப்ரியா சுலே, கனிமொழி, டிம்பிள் யாதவ் ஆகியோர் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளுடன் அமர்ந்திருக்கும் படம் பகிரப்பட்டு வருகிறது. ராஜாத்தி அம்மாளை அரவணைத்தபடி சுப்ரியா சுலே அமர்ந்திருக்க, அவர் தோள்மீது தலைவைத்து சாய்ந்தபடி கனிமொழி எம்பி போஸ் கொடுத்திருக்கும் இந்த படம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகவும் ஆகி இருக்கிறது. இந்த படத்தில் லாலுவின் மகள் மிசா பாரதி இடம் பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும் எனும் ஆதங்கத்தையும் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications