அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள்? சம்பளம் கூட தரவில்லை என புகார்! ஷாக்
சென்னை: அம்பத்தூரில் செயல்பட்டு வரும் ஆவின் பண்ணையில், தங்களுக்கு உரியச் சம்பளம் வழங்கவில்லை என்று கூறி சிறார்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு சார்பில் ஆவின் மூலம் பால் விற்பனை செய்யப்படுகிறது. இங்கே தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் ஆவின் பால் விலை குறைவாக உள்ளது. இதனால் அதிகப்படியான மக்கள் ஆவின் பாலை வாங்கவே ஆர்வம் காட்டுகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் டீலர்கள் மற்றும் கடைகளில் மூலம் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல பால் அட்டைகள் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது. பால் அட்டை மூலம் மட்டும் தினசரி 6 லட்சம் லிட்டர் பால் விநியோகிக்கப்படுகிறது.

ஆவின் சர்ச்சை: இருப்பினும், கடந்த சில காலமாகவே ஆவின் பால் குறித்து தொடர்ச்சியாகச் சர்ச்சை செய்திகள் வெளியாகி வருகிறது. குறிப்பாகப் பல இடங்களில் பால் விநியோகத்திலும் தட்டுப்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மறுபுறம் பால் உற்பத்தியாளர்களும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் அமைச்சரவை மாற்றத்தின் போது, பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டார். இருப்பினும், நிலைமை முழுமையாகச் சரியாகவில்லை. கடந்த சில நாட்களாகத் தட்டுப்பாடு என்ற புகார் மீண்டும் எழுந்துள்ளது. இதற்கிடையே இப்போது அம்பத்தூர் ஆவின் பண்ணை குறித்து வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கே சிறார்கள் வேலையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

அம்பத்தூர் பால் பண்ணை: அதாவது இப்போது அம்பத்தூர் ஆவின் பண்ணைத் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் இயக்கப்படுகிறது. இதனிடையே இன்று காலை தங்களுக்கு ஊதியம் தரவில்லை என்று நிர்வாகத்தைக் கண்டித்துப் பாதிக்கப்பட்ட சிறார்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 1.5 மாதங்களாக அங்கே பணியாற்றி வந்ததாகவும் இருப்பினும் தங்களுக்கு ஊதியம் தரவில்லை என்று கூறி அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு நிறுவனமான ஆவினிலேயே சிறார்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தொடர்புடைய ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் கண்டமும் தெரிவித்துள்ளனர்.
என்ன நடவடிக்கை: ஊடகங்களில் வெளியான தகவல் மற்றும் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு அங்கே ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவை அனுப்பி வைத்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சம்பளம் குறைவு, அதையும் முறையாக ஒப்பந்ததாரர் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
மேலும், ஆவினில் குழந்தை தொழிலாளர் பணியாற்ற வாய்ப்பு இல்லை என்று குறிப்பிட்ட அவர், குழந்தை தொழிலாளர் பணியாற்றியது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், தனியார் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications