கல்யாண பத்திரிகைகளில் இனி "மது அருந்த அரசு அனுமதி பெற்ற திருமண மண்டபம்"- சாடும் நெட்டிசன்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் புதிய அனுமதியால் இனி திருமண அழைப்பிதழ்களில் "மது அருந்த அரசு அனுமதி பெற்ற திருமண மண்டபம்" என்ற வாசகம் இடம்பெறப் போகிறது என சாடுகின்றனர் நெட்டிசன்ஸ்.

தமிழ்நாட்டில் அரசு மதுவிற்பனையை மேற்கொண்டு வருவது தொடர்பாக ஏற்கனவே கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரமாக மதுவிற்பனை மட்டுமே இருந்து வருவதும் விமர்சிக்கப்படுகிறது.

Netizens slam Tamilnadu Govt for allow of liquor in marriage halls, stadiums

தமிழ்நாடு சட்டசபையில் 500 மதுபான கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்த மகிழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு இப்போது வேட்டு வைத்திருக்கிறது.

அதாவது இனி திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்விடங்கள், விளையாட்டு மைதானங்கள் என பல இடங்களிலும் உரிய கட்டணம் செலுத்தி மதுவிநியோகம் செய்து கொள்ளலாம். இதற்காக உரிய அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் புதிய அரசாணை. டாஸ்மாக் மதுபான கடைகள் ஏற்கனவே வீதிக்கு வீதி திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு பெரும் தொல்லையாக இருந்து வருகிறது. இனி நடுத்தெருவில் இருக்கும் அத்தனை கல்யாண மண்டபங்கள் தொடங்கி காணும் இடமெல்லாம் மதுபான விநியோகத்துக்கு அனுமதி தந்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு அரசின் இந்த அனுமதி மிக கடுமையாக எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் இம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, திருமணங்கள். விருந்துகள். விளையாட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் மதுபானம் எளிதில் கிடைக்க வழிவகுக்கும் தமிழக அரசின் முடிவு ஆரோக்கியமானது அல்ல. இந்த முடிவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் . ஏற்கனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் வாகன விபத்துக்கள் மிக அதிகமாக நடைபெற்று வருகின்றன. பொது நிகழ்வுகளில் மதுபானம் விநியோகிக்க அனுமதி வழங்கினால் மோசமான சமுதாய சீரழிவையும் சாலை விபத்துகளையும் அதிகரிக்கச் செய்யும். உயிரிழப்புகளும் அதிகரிக்கக்கூடும். இந்த ஆண்டு 500 டாஸ்மாக் கடைகள் பூட்டப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்து மக்களின் வரவேற்பைப் பெற்ற தமிழக அரசு மக்கள் நலன் கருதி திருமண மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மது வினியோகிக்க அனுமதிக்கும் இந்த ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என சாடியிருந்தார்.

Netizens slam Tamilnadu Govt for allow of liquor in marriage halls, stadiums

சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இதனை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். இனிமேல் கல்யாண பத்திரிகைகளில் மது அருந்த அரசு அனுமதி பெற்ற திருமண மண்டபம் என்ற வாசகம் தவறாமல் இடம்பெற்று விடும் எனவும் கலாய்க்கின்றனர்.

வீட்டிற்கு தெரியாமல் குடித்தவர்கள் இனி பொது இடத்தில் தைரியமாக குடிப்பார்கள் என்கிறார் @GNV_Kannan என்ற நெட்டிசன். @chandra37874882 என்பவர், கலாச்சார சீரழிவை அடுத்த கட்டம் நோக்கி எடுத்து செல்லும் திராவிட மாடல் அரசு என சாடுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+