Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நியூஸ் பேப்பர்ல பஜ்ஜி.. சிக்கன் 65ல கலர் இருக்கவே கூடாது! உணவக உரிமையாளர்களுக்கு 14 கண்டிஷன்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்து வகை உணவு வணிக நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறித்து உணவு பாதுகாப்பு துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருள்கள் நேரடியாக விநியோகிக்கப்பட கூடாது, சிக்கன் 65, பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களின் செயற்கை நிறமிகளை சேர்க்கக்கூடாது உள்ளிட்ட 14 ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அனைத்து வகை உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை வழங்கி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி தரமற்ற முறையில் உணவு வழங்கும் நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் உணவகங்கள், உணவு துறை சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் உணவு வணிகர்கள் பின்பற்ற வேண்டிய 14 வகையான வழிகாட்டி நெறிமுறைகளையும் உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட வாரியாக நாளிதழ்களிலும் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Food Safety Tamil Nadu tn govt

அந்த அறிவிப்பில்," பிரிவு 26,31,32 உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006 r/w விதி 2.1.14(1), உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் (உணவு வணிக உரிமம் மற்றும் பதிவு) ஒழுங்குமுறைகள், 2011 & விதி 2.3.15(1)(b), உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் (விற்பனை மீதான தடை மற்றும் கட்டுப்பாடுகள்) ஒழுங்குமுறைகள், 2011-ன் கீழ் அறிவிக்கப்படுகின்றது.

*அனைத்து வணிகர்களும் உணவு https://foscos.fssai.gov.in இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

*அனைத்து உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டைஃபாய்டு மற்றும் மஞ்சள் காமலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி, மருத்துவத் தகுதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

*உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து, பகுப்பாய்வறிக்கை வைத்திருக்க வேண்டும்.

*உணவுப் பொருட்களை ஈக்கள்/பூச்சிகள் மொய்க்காதவண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைத்து, காட்சிபடுத்த வேண்டும்.

*உணவு எண்ணெயை ஒருமுறை மட்டுமே சமைக்கப் பயன்படுத்த வேண்டும். மீதமான பயன்படுத்திய உணவு எண்ணெயை, FSSAI அங்கீகரித்த கொள்முதலாளருக்கும் மட்டும் விற்க வேண்டும்.

*விற்பனையாகாமல் மீதமான அப்புறப்படுத்திடல் வேண்டும். உணவை நுகர்வோருக்கு வழங்காமல்

*நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருளில் நேரடியாகப்படும் வகையில் பரிமாறவோ/பொட்டலமிடவோ கூடாது.

*அனுமதிக்கப்படாத நெகிழியில் (ப்ளாஸ்டிக்) உணவுப் பொருட்களை சூடாகவோ அல்லது இயல்பு நிலையிலோ பொட்டலமிடக்கூடாது.

*உணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர்/அலுமினியம் ஃபாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்படாத நெகிழியினை (ப்ளாஸ்டிக்) பயன்படுத்தக்கூடாது.

*எவ்வகை உணவு எண்ணெய்களையும் லேபிள் விபரங்களின்றியும். பொட்டலமிடாமல் சில்லறை அடிப்படையிலும் (loose sale) நுகர்வோருக்கு விற்பனை செய்தல் கூடாது.

*உணவைக் கையாளுபவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றைத் தவறாமல் அணிய வேண்டும்.

*பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களை கொள்முதல் /விற்பனை செய்யும் போது, FSSAI உரிம எண்ணுடன் கூடிய முழுமையான லேபிள் விபரங்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

*உணவு சமைக்க மற்றும் நொறுக்குத் தீனிகள் தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவகங்கள்/பேக்கரி/இனிப்பகங்கள் உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் அயோடின் கலக்காத உப்பு இருக்கக்கூடாது.

*சிக்கன்-65. பஜ்ஜி, கோபி-65 போன்ற உணவுப் பொருட்களில் செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது.

உணவு வணிகர்கள் அனைவரும் இவ்வறிவிப்பைக் கண்ட 14 தினங்களுக்குள் மேற்கூறியவற்றை தவறாது பின்பற்றிட வேண்டுமென அறிவிக்கப்படுகின்றது. தவறும்பட்சத்தில், எவ்வித முன்னறிவிப்பின்றி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது." என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+