சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் புதிய அறிவிப்புகள் வரும்... அமைச்சர் செங்கோட்டையன்

Google Oneindia Tamil News

Recommended Video

    மொழிப்பாடம் என்பது ஒன்று மட்டுமே இருக்கும்- செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி- வீடியோ

    சென்னை: இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் புதிய அறிவிப்புகள் வர உள்ளன என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    மேலும், இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    New announcements coming Soon, India Will look back Says Minister Sengottaiyan

    முன்னதாக, இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார். மேலும், தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் எங்கள் லட்சியப்பயணமாக இருக்கிறது என்றார்.

    தமிழும், ஆங்கிலமும் தான் தமிழகத்தில் வீறுநடை போடும். தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர முடியும் . 3 வது மொழியை மத்திய அரசு வலியுறுத்திய போது, மாநில அரசின் நிலை குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம்.

    இதனையடுத்து, எந்த மொழியையும் திணிக்கும் எண்ணம் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தி விட்டதால், அதுபற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    12 ஆண்டுக்கு பிறகு, 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1, 6, 9,11 ஆகிய 4 வகுப்புகளுக்கு பாட மாற்றம் உருவாக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், புதிய பாடத்திட்டத்தை பயிற்றுவிக்க 210 நாட்கள் தேவைப்படும் என்பதால் பள்ளிகள் முன்னதாகவே திறக்கப்பட்டது. பள்ளிகளில் குடிநீர் பற்றாக்குறையை முழுமையாக தீர்த்திடும் வகையில் உள்ளாட்சித் துறையுடன் பள்ளிக்கல்வித் துறை இணைந்து தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்றும் பேசினார்.

    உள்ளாட்சி தேர்தல்... தனித்து போட்டியிட்டு கெத்து காட்டுமா பாமகவும், தேமுதிகவும்! உள்ளாட்சி தேர்தல்... தனித்து போட்டியிட்டு கெத்து காட்டுமா பாமகவும், தேமுதிகவும்!

    இதற்கிடையே, மொழி விஷயத்தில் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். நீட் தேர்வு தோல்வியால் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. தற்கொலை என்பது தீர்வல்ல என அமைச்சர் ஜெயக்குமா கூறியுள்ளார்.

    மேலும், எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது. இதுதான் அரசின் கொள்கை. இருமொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம். மொழிக் கொள்கையில் எந்தவித மாறுபாடும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    English summary
    Minister Sengottaiyan Said that New announcements coming Soon, India Will look back
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X