இதைவிட வேற சான்ஸ் கிடைக்காது! செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர வாய்ப்பு.. தேடி வரும் பல லட்சம்!
சென்னை: செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் புதிய பயனாளர்களைச் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தபால் நிலையங்களில் இதற்கான அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டு, பயனாளர்களைச் சேர்க்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
செல்வமகள் சேமிப்புத் திட்டம்
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, குறைந்த சேமிப்பில் அதிக வருமானம் கிடைக்கும் வகையில் செல்வமகள் சேமிப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. பெண்களின் கல்வி, திருமணம், மருத்துவச் செலவுகள் போன்ற தேவைகளுக்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று செல்வமகள் சேமிப்புத் திட்டம். இந்த திட்டத்தில், வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், பல பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதன் மூலம், பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த திட்டத்தில் ரூ.11,16,815 வரை சேமிக்க முடியும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கில் ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்ட கணக்கை ஆன்லைனில் திறக்க முடியாது. ஆனால், கணக்கு தொடங்கிய பிறகு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம். தபால் அலுவலகத்தில் கணக்குத் தொடங்கியிருந்தால், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம்.
படி 1: IPPB கணக்கிற்கு பணம் மாற்றுதல்
உங்களிடம் IPPB கணக்கு இல்லையென்றால், அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று IPPB கணக்கைத் திறக்கலாம். இது ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவும் ஒரு அடிப்படை சேமிப்புக் கணக்கு ஆகும்.

பிறகு, இணைய வங்கி, மொபைல் வங்கி அல்லது தபால் நிலையத்தில் பணம் செலுத்துதல் போன்ற முறைகளைப் பயன்படுத்தி, உங்கள் சேமிப்பு அல்லது நடப்பு வங்கிக் கணக்கிலிருந்து IPPB கணக்கிற்கு பணத்தை மாற்றவும்.
படி 2: சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு IPPB செயலி வழியாக பணம் அனுப்புதல்
IPPB மொபைல் செயலியை ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவவும்.
செயலியில் உள்நுழைந்து, "அஞ்சல் துறை (DOP) தயாரிப்புகள்" பிரிவுக்குச் செல்லவும்.
"சுகன்யா சம்ரிதி கணக்கு" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
SSY கணக்கு எண் மற்றும் DOP வாடிக்கையாளர் ஐடியை உள்ளிடவும்.
எவ்வளவு தொகை செலுத்த வேண்டுமோ அதை உள்ளிட்டு பரிவர்த்தனையை உறுதிப்படுத்தவும்.
பணம் வெற்றிகரமாக மாற்றப்பட்டதும், IPPB செயலி மூலம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
யார் இந்த திட்டத்தில் சேரலாம்?
10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இந்தத் திட்டத்தைத் தொடங்கலாம். பெண் குழந்தைகள் 10 வயதை கடந்ததும், அவர்களின் பெயருக்கு கணக்கை மாற்றிக்கொள்ள முடியும். இந்த திட்டத்தில் 15 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்ய முடியும். 21 ஆண்டுகளுக்குப் பிறகு டெபாசிட்டை திரும்பப் பெறலாம்.
இந்த திட்டத்தில் மாதம் ரூ.1000 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்த சேமிப்பு திட்டத்தில் 8% வட்டி வழங்கப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் மாதம் ரூ.2000 முதலீடு செய்தால், 21 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.11.16 லட்சம் வரை பெற முடியும். இந்த திட்டத்தில் இணைய சில விதிமுறைகள் உள்ளன.
லாக்-இன் காலம்
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ், பெண் குழந்தை 10 வயதை அடையும் முன்பு, பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கைத் திறக்க முடியும். பெண் குழந்தை பிறந்ததில் இருந்து 10 வயது வரை கணக்கு தொடங்கலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்த கணக்கைத் திறக்க முடியும்.
ஒருவேளை, கணக்கு வைத்திருக்கும் பெண் வெளிநாட்டிற்கு சென்று குடியுரிமை பெற்றால், வட்டி நிறுத்தப்படும். எனவே, 21 ஆண்டு வரை அவர் வெளிநாட்டில் வேலை செய்யலாம். ஆனால், குடியுரிமை பெற முடியாது. கணக்கு வைத்திருக்கும் பெண் இறந்துவிட்டால், வட்டி நிறுத்தப்பட்டு, கணக்கு மூடப்படும். அந்த தொகை பாதுகாவலர் அல்லது பெற்றோரிடம் வழங்கப்படும். இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு இருக்கும் முக்கியமான திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான இந்த சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற தபால் நிலையங்களில் புதிய பயனாளர்களைச் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications