பிரசவத்தின்போது குழந்தை தலையை பிய்த்து எடுத்த நர்ஸ்.. கூவத்தூரில் கொடூரம்
Recommended Video

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் சுகபிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரிலுள்ளது அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இங்கு நேற்று இரவு நிறைமாத கர்ப்பிணி பொம்மி என்பவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால், அப்போது மருத்துவர் பணியில் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து, அங்கே பணியிலிருந்த செவிலியர்கள் பேறுகாலம் பார்த்துள்ளனர். சுக பிரசவத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டன.
குழந்தையும் வெளியேவர ஆரம்பித்தது. ஆனால், அனுபவம் இல்லாத செவிலியர்கள், குழந்தையின் தலையை தனியாக பிய்த்து எடுத்துவிட்டனர். இதனால் அந்த சிசு பரிதாபமாக பலியானது. இதனிடையே பொம்மியின் உடலுக்குள் மாட்டிக்கொண்ட, குழந்தையின் உடல்பகுதியை போராடி மீட்ட செவிலியர்கள், உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பொம்மியை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
பாதிக்கப்பட்ட பொம்மிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார், 30 கிராம, மக்கள் வந்து செல்லும் சுகாதார நிலையத்தில், இரவு நேரத்தில் மருத்துவர் பணியில் இல்லாத நிலை நீடிப்பதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications