எத்தனை வெறி! இறைச்சி போல் ஆம்ஸ்ட்ராங்கை சதக் சதக்கென வெட்டிய ரவுடி திருவேங்கடம்! பகீர் சிசிடிவி
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை ரவுடி திருவேங்கடம் வெட்டிக் கொல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த ரவுடி திருவேங்கடமும் இன்று போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற போது அவரை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 11 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த 11 பேரில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தின் வங்கிக் கணக்குகளில் இந்த கொலைக்கான பணம் செலுத்தப்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல ரவுடி திருவேங்கடம்தான் இதில் முக்கிய மூளையாக செயல்பட்டதாகவும் அவர்தான் ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாகவும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை திருவேங்கடம் தனது வீட்டருகே வைத்திருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை மாதவரம் ஆட்டுதொட்டி அருகே உள்ள அவரது வீட்டிற்கு போலீஸார் அழைத்து சென்றனர்.
அப்போது அவர்களிடம் இருந்து தப்பியோடிய திருவேங்கடம், வெஜிடேரியன் பகுதியில் ஒரு தகர கொட்டகைக்குள் மறைந்திருந்தார். அங்கு அவர் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீஸாரை சுட முயற்சித்தார். துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனாலும் அதை மதிக்காமல் போலீஸாரை நோக்கி திருவேங்கடம் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒரு ஆய்வாளருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து தற்காப்புக்காக திருவேங்கடத்தை என்கவுன்ட்டரில் சுட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை ரவுடி திருவேங்கடம் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஆம்ஸ்ட்ராங் புதிதாக கட்டி வந்த வீட்டின் கட்டுமான பணிகள் நடக்கின்றன. குறுகலான பாதையில் ஜல்லியையும் சிமென்ட்டையும் கலக்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு ஒரு பெண் சித்தாள் வேலை செய்கிறார். அந்த கலவை கலக்கும் இயந்திரம் அருகே ஒரு ஆண் சித்தாள் நிற்கிறார். ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசை திருப்பிய திருவேங்கடம் அவரை சரமாரியாக வெட்டுகிறார். உடனே அவருடன் இருந்தவர்களை துரத்திய மர்ம கும்பல், திடீரென உணவு டெலிவரி ஆடை அணிந்து கொண்டு விஜய், திருமலை ஆகியோர் அரிவாளுடன் ஓடி வந்து வெட்டுகிறார்கள்.
பிறகு கோகுல், மணிவண்ணன் ஆகியோர் வந்து அவர்களும் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டுகிறார்கள். இதனால் அந்த இடமே களேபரமாகும் நிலையில் அங்கிருந்த சித்தாட்களையும் வெட்டுவதற்காக விஜய் துரத்திக் கொண்டு ஓடும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியும் ஆத்திரம் அடங்காமல் அங்கிருந்த நாற்காலியை வெட்டுகிறார். பின்னர் ஆளுக்கு ஒரு மூலைக்கு தப்பி செல்கிறார்கள்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications