இந்திய ஒன்றியத்திலிருந்து தமிழ்நாட்டை தனித்துவமான நாடாக்குவோம்: விசிக வன்னி அரசு பேச்சு- பாஜக டென்ஷன்!
சென்னை: இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழ்நாட்டை தனித்துவமான நாடாக்குவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு பேசியதற்கு தமிழக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் வாழ்நாள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலையை வலியுறுத்தி 11 ஆண்டுகளுக்கு முன்னர் தீக்குளித்து மாண்டவர் இளம்பெண் செங்கொடி. செங்கொடியின் 11-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பேசியதாவது: பேரறிவாளன் முழுமையாக விடுதலையாகிவிட்டார். நளினி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதேபோல ரவிச்சந்திரனும் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த விடுதலைக்குப் பிறகு எஞ்சியவர்களும் வழக்கு தொடருவார்கள்.

புலிகளின் நிழலாக மக்கள் மன்றம்
விடுதலைப் புலிகளின் நிழலாக மக்கள் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் செங்கொடி நினைவு நாளை நடத்தி வருகிறது. சனாதனத்தை நிலை நிறுத்த, தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகத்தை இன்று அழித்தொழிக்க முயற்சி செய்கிறார்கள். அந்த அநீதியான சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டிய பொறுப்பும் தேவையும் நிறைய இருக்கிறது. கிராமம் கிராமமாக நாம் செல வேண்டிய தேவை இருக்கிறது. சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம்; ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம் என்று திருமாவளவன் தமது பிறந்த நாள் செய்தியாக தெரிவித்தார்.

கிராமங்கள் நோக்கி
ஓராண்டு காலம் நாங்கள் சனாதன சக்திகளுக்கு எதிராக கிராமம் கிராமமாக செல்கிறோம்; தந்தை பெரியார், அம்பேத்கர் கருத்தியலோடு கிராமங்களுக்கு செல்கிறோம். சனாதன சக்திகளுக்கு எதிராக களமாடுவதில் எங்கள் உயிரே போனாலும் கவலைப்படமாட்டோம். சனாதன சக்திகளை வீழ்த்துவது, தமிழ்நாட்டை முழுமையான தமிழ்நாடாக மாற்றுவது என்கிற அடிப்படையில்தான் விடுதலை சிறுத்தைகள் களமாடுகிறோம்.

தமிழ்நாடு தனித்துவமான நாடு
செங்கொடியின் இந்த நினைவுநாளில் விடுதலை- தமிழ்நாடுடைய முழுமையான விடுதலை, தமிழ்- தமிழருடைய உரிமை, இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழ்நாடு என்பது ஒரு தனித்துவமான நாடு என்பதை அடைவது என்பதுதான் செங்கொடிக்கு நாம் செலுத்தக் கூடிய கடமை. இவ்வாறு வன்னி அரசு கூறினார்.

பாஜக எதிர்ப்பு
ஆனால் வன்னி அரசுவின் இந்தப் பேச்சு பிரிவினையை தூண்டுவதாக தமிழக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வன்னி அரசுவின் இந்த பேச்சை தமது ட்விட்டர் பகிர்ந்து கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு











Click it and Unblock the Notifications