யார் அந்த "விஐபி".. சித்ராவுக்கு குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் அனுப்பியவர்.. போலீஸ் அதிரடி விசாரணை
நடிகை சித்ரா மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன
சென்னை: சித்ராவுக்கு குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் அனுப்பிய விஐபி யார் என்ற விசாரணையை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.. அதேசமயம், இது தற்கொலைதான் என்று போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் தெரிவித்தாலும், சித்ரா சம்பந்தப்பட்டோர் அதை நம்ப இன்னமும் மறுத்து வருகின்றனர்.
வறுமையுடன் போராடி முன்னுக்கு வந்தவர் சித்ரா.. புகழின் உச்சிக்கு சென்றுவிட்டாலும், சித்ராவுக்கு நிறைய பணநெருக்கடி இருந்ததாம்.. மேலும் கடன்பிரச்சனைகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஒருவேளை இதுவும் அவரை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்து வருகிறது. சித்ராவுக்கு லோன்கள் இருக்கிறதாம்.. வீட்டு லோன், கார் லோன் என பேங்குகளில் நிறைய கடன் இருக்கிறதாக சொல்லப்படுகிறது.

நெருக்கடி
கொஞ்ச நாளைக்கு முன்புதான் ஒரு ஆடி கார் வாங்கி இருக்கிறார்.. தி.நகரில் ஆபீஸ் வைத்திருக்கிறார்.. இந்த ஆபீசுக்கு வாடகையே 1 லட்சம் ரூபாயாம்.. கல்யாணத்துக்கு பிறகு சேர்ந்து வாழ ஒரு வீடு கட்டினாராம்.. அதற்கும் லோன் வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது... இதெல்லாம்கூட சித்ராவை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி இருக்குமோ என்ற கேள்வி வருகிறது.

நண்பர்கள்
ஆனால், தைரியமான பெண், மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட பெண், எந்த சூழலையும் சமாளித்து வெளியே வந்துவிடலாம் என்று தீர்க்கமாக நினைக்கக்கூடிய பெண்ணுக்கு, இந்த லோன் சமாச்சாரம் எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்கிறார்கள் சித்ராவின் நண்பர்கள்.

திறப்பு விழா
மற்றொரு பக்கம் சித்ராவின் செல்போனை வைத்து விசாரணை நடந்து வருகிறது.. சித்ராவின் செல்போன் போலீஸிடம்தான் இருக்கிறது... கடந்த அக்டோபர் மாதம் பெரம்பலூரில் ஒரு கடைத் திறப்புவிழாவுக்கு சென்றபோது, ஒரு அரசியல் பிரமுகர் அறிமுகமாகி இருக்கிறார்.. அவர் சித்ராவின் செல்போனுக்கு "குட்மார்னிங்", "குட்நைட்" மெசேஜ்களை அனுப்ப தொடங்கி உள்ளார்.. இப்படி ஆரம்பித்த நட்பு காரணமாக, மேலும் சில மெசேஜ்களும் வந்துள்ளன.

சைபர் கிரைம்
2 பேருமே நட்பாக மட்டுமே மெசேஜ்களை செய்து கொண்டு வந்துள்ளனர். எனினும், அந்த அரசியல் பிரமுகரின் வாட்ஸ்அப் மெசேஜ்கள் அடிப்படையில் அவரிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர். இந்த செல்போனில் சில தடயங்கள் அழிக்கப்பட்டிருக்கிறதாம்.. அதை சைபர் க்ரைம் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.. மேலும், அந்த அழிந்து போனவைகளை மறுபடியும் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தீர்வு
இதனிடையே, சித்ரா, தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவலை சித்ராவின் நட்பு வட்டாரம் வலுவாக மறுத்து வருகிறது.. அவர்களால் அது தற்கொலை என்று நம்பவே முடியவில்லை.. இப்போதைக்கு ஹேமந்த்திடமும், அம்மா விஜயாவிடமும் நடத்தி வரும் விசாரணை முடிவில்தான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இவர்கள் அளிக்கும் தகவல்கள், ஆர்டிஓ விசாரணையின் முடிவு, இவைகளை வைத்துதான், இந்த வழக்கு அடுத்தகட்டத்துக்கு நகரும் என்றும் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications