Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓஎம்ஆரில் இனி ஜாலியா போலாம்.. 25 மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்! சென்னை குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பெருநகர் மற்றும் புறநகரை இணைக்கும் வகையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உள்ள நிலையங்களில் வணிக வளாகங்கள் அமைக்க ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டதுடன், திருமங்கலம் ரயில் நிலையத்துடன் கூடிய 9 மாடி கட்டிடத்தின் மாதிரி படங்கள் பயணிகளின் வரவேற்பை பெற்றது நினைவிருக்கலாம். இந்நிலையில், அடுத்த 3 வருடங்களில் 25 மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வணிக வளாகங்கள் அமைக்கும் நடவடிக்கையை மெட்ரோ கையில் எடுத்துள்ளதாம்.

அடுத்த 3 ஆண்டுகளில் 25 மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வணிக வளாகங்கள்: 3 மில்லியன் சதுர அடியில் அமைக்க திட்டம்

Chennai OMR Road Metro

அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 மில்லியன் சதுர அடிக்கு மேற்பட்ட அலுவலக மற்றும் வர்த்தக மையங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 25 நிலையங்களில் இத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட உள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ ரயில் இயக்கம்

சென்னையில் முதல் கட்டத்தில் 54 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. ஏர்போர்ட் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் இப்போது மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

இதனை தவிர, 2, 3, 4, 5வது வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. மேற்கண்ட வழித்தடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்ட பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி பல்வேறு இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக, அடுத்த 3 வருடங்களில், 118.9 கிலோமீட்டர் நீள வழித்தடத்தில் 128 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் கிட்டத்தட்ட 25 நிலையங்களில் இத்திட்டங்களை ஒருங்கிணைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

3 ஆண்டுகளில் வணிக வளாகங்கள்

அதாவது அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இங்கெல்லாம் வணிக வளாகங்கள் திறக்கப்பட உள்ளது என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூடுதலாக சொல்லும்போது, "மெட்ரோ நிலையங்களில், அலுவலக வளாகங்கள், ரீட்டெயில் கடைகள், ஹைப்பர் மார்க்கெட்கள், ஓட்டல்கள், பெரிய ஷாப்பிங் மால்கள், வணிக மையங்கள், பொழுதுபோக்கு தளங்கள் போன்ற வசதிகள் ஒருங்கிணைந்த சிறிய வணிக வளாக மையங்களாக மாற்றப்பட உள்ளன.

உயரமான கோபுரங்கள்

சென்னை சென்ட்ரல், மந்தைவெளி, ஆயிரம் விளக்கு, திருமங்கலம் போன்ற இடங்களில் பல தளங்களை கொண்ட உயரமான கோபுரங்கள் எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல பெருங்குடி, சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், துரைப்பாக்கம், மாதவரம் நெடுஞ்சாலை, செம்பியம், அயனாவரம், பெரம்பூர், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, அடையாறு பணிமனை, திருமயிலை உள்ளிட்ட நிலையங்களில் கூடுதல் மாடிகளுடன் வர்த்தக வளாகங்கள் உருவாக்கப்பட உள்ளன.

கட்டுமான கட்டத்திலேயே சொத்து மேம்பாட்டு பணிகளை சேர்க்கும் உத்தரவை மெட்ரோ நிர்வாகம் முன்னெடுத்து வருவதால் நடைமுறை சிக்கல்களை ஆரம்பத்திலேயே களைய முடியும். இந்த திட்டத்தில் 3, 5 வழித்தடம் சந்திக்கும் இடங்கள், சென்னையின் மிகப் பெரிய தொழில் மற்றும் வணிக மையங்களாக உருவாகும் வாய்ப்புள்ளது" என்று மெட்ரோ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஓஎம்ஆர் ரோட்டில் இனி நிம்மதி

மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் ஓஎம்ஆர் பகுதிகளுக்கு நேரடி மெட்ரோ இணைப்பு உள்ளது, ஐடி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அடிகோலுவதுடன், போக்குவரத்து நெரிசலுக்கும் ஓரளவு தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஓஎம்ஆர் - இசிஆர் இணைப்பு சாலையில் உள்ள பகுதிகள் பெரிய அளவிலான நிறுவனங்களின் பணியகங்களாக மாறக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+