புதிய வருமான வரி சட்டம்.. வருமான வரித்துறை அதிகாரிகள் சொன்ன முக்கியமான விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அண்மையில் தாக்கல் செய்திருந்தார். அப்போது 'புதிய வருமான வரி சட்டம்- 2025' கொண்டுவரப்பட்டு உள்ளது. இது வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருவது பற்றி நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த 'புதிய வருமான வரி சட்டம் சட்ட சிக்கல்களை குறைப்பதுடன், டிஜிட்டல் முறையை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது' என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி தாக்கல் செய்தார். அதில் 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த '1961-ம் ஆண்டு வருமான வரி சட்டம்' அதற்கு மாற்றாக 'புதிய வருமான வரி சட்டம்- 2025' கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த புதிய வருமான வரிச்சட்டம் ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

New income tax law The important point mentioned by the income tax officials

இந்த சட்டம் பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் கூறும் போது, வரிவிதிப்புகளை எளிமையாக்குவதையும், சட்ட சிக்கல்களை குறைப்பதையும், டிஜிட்டல் முறையை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டிருக்கிறது புதிய வருமான வரி சட்டம் எளிமைப்படுத்தப்பட்ட சட்டமாக கொண்டுவரப்பட்டிருக்கிறது. பழைய சட்டத்தில் இருந்த 50 சதவீதத்திற்கும் அதிகமான சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டு, சட்டம் எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய சட்டத்திலும், ஏற்கனவே உள்ள புதிய வரி முறை மற்றும் பழைய வரி முறை இரண்டும் தொடரும் வகையில் மாற்றப்பட்டிருக்கிறது.

புதிய வருமான வரி சட்டத்தில் வருமான வரி தாக்கல் செய்யும் நடைமுறை எளிதாக மாற்றப்பட்டிருக்கிறது. சாமானிய மக்கள் மிக எளிதாக வருமான வரி தாக்கல் செய்ய வழிவகை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. காலக்கெடுவுக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரி அறிக்கைகளுக்கு 'ரீபண்ட்' பெற புதிய சட்டம் அனுமதி அளிக்கிறது. முந்தைய ஆண்டு மற்றும் மதிப்பீட்டு ஆண்டு என்ற வேறுபாடு நீக்கப்பட்டு, 'வரி ஆண்டு' என்ற ஒரே கட்டமைப்புக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்த புதிய சட்டம், வரி செலுத்துவோர் இணக்கத்தை எளிதாக்குவதற்கும், வரி ஏய்ப்பை குறைப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ. 12 லட்சம் வரை வரி இல்லை

புதிய வரி முறையில் வரித் தள்ளுபடி வரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன்படி, உங்கள் ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் வரை இருந்தால், நீங்கள் ஒரு ரூபாய் கூட வருமான வரி செலுத்தத் தேவையில்லை. நடுத்தர வர்க்கத்தினருக்கு இது மிகப்பெரிய நிம்மதியாக பார்க்கப்படுகிறது.

நிலையான கழிவு அதிகரிப்பு

சம்பளம் பெறுபவர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நிலையான கழிவு ரூ. 50,000-லிருந்து ரூ. 75,000-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம், ரூ. 12.75 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள் (75,000 கழிவு போக மீதி 12 லட்சம்) வரி ஏதும் செலுத்த வேண்டிய நிலை இருக்காது.

புதிய வரி முறை இப்போது 'இயல்புநிலை' வரி முறையாக மாற்றப்பட்டுள்ளது. இதில் வரி அடுக்குகள் மாற்றியமைக்கப்பட்டு வரி விகிதங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது.

ரூ. 0 - 4 லட்சம்: 0%

ரூ. 4 - 8 லட்சம்: 5%

ரூ. 8 - 12 லட்சம்: 10%

ரூ. 12 - 16 லட்சம்: 15%

ரூ. 16 - 20 லட்சம்: 20%

ரூ. 20 - 24 லட்சம்: 25%

ரூ. 24 லட்சத்திற்கு மேல்: 30%

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+