அலுவலக மொழியாக இந்தி- கடும் எதிர்ப்பால் மன்னிப்பு கேட்டது நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம்!
சென்னை: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் அலுவலக மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என அனுப்பிய சுற்றறிக்கைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்நிறுவனம் இன்று மன்னிப்பு கேட்டுள்ளது.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனமான ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் அனைத்து மண்டல அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பும் அறிக்கைகள் இந்தியில் மட்டும்தான் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதேபோல தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் பதில்களும் இந்தியிலேயே இருக்க வேண்டும். அனைத்து அலுவலக்ப் பணிகளும் இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும் என நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவன சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் அனைத்து குடிமக்களும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துவரும் நிலையில், மத்திய அரசும் அதன் நிறுவனங்களும் பிற இந்திய மொழிகளைவிட இந்திக்கு அனைத்து வழிகளிலும் தேவையற்ற மற்றும் நியாயமற்ற ஆதரவைத் தொடர்ந்து வழங்குகின்றன. மேலும், மக்கள் நலனுக்காக அல்லாமல், இந்தியை நம் தொண்டையில் திணிக்கவே தங்கள் மதிப்புமிக்க வளங்களைச் செலவிட விரும்புகின்றனர். இவ்வகையில் சமீபத்தில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அநீதியானது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்தி பேசாத மக்களையும், இந்தி பேசாத ஊழியர்களையும் அவமதித்ததற்காக நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீர்ஜா கபூர் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்தியாவில் இந்தி பேசாத குடிமக்கள், தங்கள் கடின உழைப்பாலும் திறமையாலும் நாட்டின்வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் தங்களின் பங்களிப்புகளை அளிக்கும்போதும், அவர்கள்இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதை சகித்துக் கொள்ளும் காலம் மலையேறிவிட்டது என கடுமையாக சாடி இருந்தார்.

இதேபோல் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சு.வெங்கடேசன் எம்பி உள்ளிட்டோரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து இன்று நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் இந்தி திணிப்புக்காக மன்னிப்பு கேட்டுள்ளது.

இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: இந்தி திணிப்பிற்கு எதிரான வெற்றி. நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் மன்னிப்பு- "தவறுதலாக நாங்கள் உணர்வுகளை காயப்படுத்தி இருந்தால் மனதார மன்னிப்பு கோருகிறோம்" என்று அறிவிப்பு. அலுவல் மொழி விதிகளில் தமிழ்நாட்டுக்கு உள்ள தனித்துவம் காக்கும் பயணத்தில் வெற்றி. இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி பதிவிட்டுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications