Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆதார் - பான் கார்டை இணைச்சிட்டீங்களா? மக்களுக்கு வந்த புதிய பிரச்சனை.. நோட் பண்ணிக்கோங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பான் கார்டு - ஆதார் கார்டு இணைத்தவர்களுக்கு புதிய பிரச்சனை ஒன்று வந்துள்ளது. பல்வேறு சேவைகளை பெறுவதில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.

இரண்டு கார்டுகளிலும் பெயர்கள் ஒரே மாதிரி இல்லாத காரணத்தால் இந்தியர்கள் பலர் பிரச்சனைகளை சந்திக்க தொடங்கி உள்ளனர். முக்கியமாக தென்னிந்தியர்கள் பலர் இதனால் பிரச்சனைகளை எதிர்கொள்ள தொடங்கி உள்ளனர்.

New issue arises as Pan Card mismatching with Aadhaar Card


ஏற்கனவே ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத 11.48 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களிடம் இருந்து மத்திய அரசு ₹600 கோடிக்கு மேல் அபராதமாக வசூலித்துள்ளது. இதுவரை, 11.48 கோடி நிரந்தரக் கணக்கு பான் எண்கள் இன்னும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்று நிதித்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் பதிலளித்தது.

வருமான வரித் துறையானது நிரந்தர கணக்கு எண்ணை PAN கார்ட் என்ற பெயரில் எல்லோருக்கும் வழங்கி வருகிறது. நம்முடைய அனைத்து வங்கி, பண பரிவர்த்தனைகளை கணக்கில் எடுக்க, கண்காணிக்க, அலச இந்த பாண் எண் அவசியம் ஆகும்.

இதை வங்கி கணக்குடன் கட்டாயமாக இணைக்க வேண்டும். அதே போல் ஆதார் அட்டையுடன் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது. இது ஒரு தனித்துவமான 10 இலக்க எண்ணெழுத்து எண்ணாகும். அனைத்து வரி செலுத்துவோருக்கும் பான் கார்டு கட்டாயம்.

பான் கார்டு முக்கியம்: நாம் வைத்து இருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்றாக பான் கார்டு அட்டையும் மாறிவிட்டது. பான் அட்டை பயன்படுத்துவதன் மூலம்தான் வங்கி தொடர்பான பல சேவைகளை நாம் பெற முடிகிறது.

நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முதலில் 1 வருடம் அவகாசம். பின்னர் கூடுதலாக 6 மாதம் அவகாசம். அதன்பின் கடந்த மார்ச் வரை 500 ரூபாய் அபாரதத்துடன் அவகாசம், பின்னர் ஜூன் இறுதிவரை 1000 ரூபாய் அபாரதத்துடன் அவகாசம் வழங்கப்பட்டது.

பிரச்சனைகள்; பான் கார்டு - ஆதார் கார்டு பெயர்கள் ஒரே மாதிரி இல்லாத காரணத்தால் இந்தியர்கள் பலர் பிரச்சனைகளை சந்திக்க தொடங்கி உள்ளனர்.

தென் இந்தியாவில், பெரும்பாலான மக்கள் இனிஷியலைப் பயன்படுத்துகிறார்கள், குடும்பப்பெயர் அல்ல. ஆனால் PAN குடும்பப்பெயரை கட்டாயமாக்குகிறது மற்றும் இனிஷியலை அனுமதிக்காது. அதே சமயம் ஆதார் மற்றும் ITR ஆகியவை பெயருடன் இனிஷியலை அனுமதிக்கிறது.

இதனால் சிலருக்கு ஆதாரில் இனிஷியல் இருக்கும். ஆனால் பான் கார்டில் அது இருக்காது. இதனால் இரண்டும் ஒரே மாதிரி இல்லை என்ற பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் இரண்டு பெயர்களும் ஒரே மாதிரி இல்லை என்ற சிக்கல்கள் தற்போது எழ தொடங்கி உள்ளன.

கட்டுப்பாடுகள்; லோன் எடுக்க, வருமான வரி தாக்கல் செய்வது, வங்கியில் அதிக அளவு பண பரிவர்த்தனை செய்வது போன்ற செயல்களுக்கு பான்கார்டு அவசியம். நம் வரவு செலவு அனைத்தும் இதன் மூலமே கண்காணிக்கப்படுகிறது.

இதற்காக கால அவகாசம் ஏற்கனவே பல முறை நீட்டிக்கப்பட்டுவிட்டது. பல முறை இந்த அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூன் 30ம் தேதியுடன் இதற்கான அவகாசம் முடிந்துவிட்டது. அதற்குள் உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இதுவரை இணைக்காதவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் வர வாய்ப்புகள் உள்ளன.

முடக்கம்: அதன் ஒரு கட்டமாக ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத 11.48 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் 57.25கோடி பேர்ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளனர். ஆனால் மொத்தமாக

70.24கோடி பேர் பான் கார்டு வைத்துள்ளனர். மீதம் உள்ள 11.5 கோடி பேரின் பான் கார்டுகள் இணைக்கப்படவில்லை என்பதால் இவர்களின் பான் கார்டு மொத்தமாக முடக்கப்பட்டு உள்ளது. பலமுறை கால அவகாசம் கொடுத்தும் கூட இவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளவில்லை என்பதால் அவர்களின் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது.

பாதிப்புகள்: பான் அட்டை ஆதார் அட்டையை இணைக்காதவர்களுக்கு உங்கள் பான் செயலற்றதாகி விடும். அதாவது அந்த எண் டீ ஆக்டிவேட் ஆகிவிடும். அப்படி ஆகும் பட்சத்தில் நீங்கள் பணம் அனுப்புவது தொடங்கி லோன் எடுப்பது, வருமான வரி தாக்கல் செய்வது வரை எல்லாம் சிக்கலாகும். சிக்கலாகும் என்பதை விட மொத்தமாக இந்த பணிகளை செய்வது இயலாத காரியம்.

இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படுமா, வங்கி கணக்கு முடங்குமா என்று இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இது தொடர்பாக ஆர்பிஐ விரைவில் விளக்கம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு வட்டார தகவல்களின்படி இனிமேல் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+