தவெகவுக்கு 41%! தட்டி தூக்கிய விஜய்! ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி சொன்னது அப்படியே பலிக்குதே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரு புதிய கட்சி மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்வதாக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ரவி நடத்திய கருத்துக் கணிப்புக்கேற்றார் போல் தற்போது களத்தில் திராவிடக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு தவெக முன்னிலை வகித்து வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்ததும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி, 234 தொகுதிகளிலும் கருத்துக் கணிப்பு நடத்தியிருந்தார். ஒவ்வொரு தொகுதிக்கும் ஓய்வு பெற்ற போலீஸார் 10 பேர் வீதம் இந்த பணியில் 2340 பேர் ஈடுபட்டிருந்தனர்.

tvk vijay

இந்தக் கணிப்பு மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பிரம்மாண்டமான முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு காவலரும் தலா 100 வாக்காளர்களைச் சந்தித்தனர். ஒட்டுமொத்தமாக 2.34 லட்சம் வாக்காளர்களிடம் நேரடி கருத்துகள் சேகரிக்கப்பட்டன.

தொழில்நுட்பம்: சேகரிக்கப்பட்ட தரவுகள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வழக்கமான ஆய்வு முறைகள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

முக்கியக் கண்டுபிடிப்புகள்

தவெகவின் விஸ்வரூபம்
வாக்கு சதவீதம்: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 41 சதவீத வாக்குகளைப் பெறும் எனத் தெரியவந்துள்ளது.

தொகுதிகள்: மொத்தம் உள்ள 234 இடங்களில் 121 தொகுதிகளை வென்று தவெக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என ரவி கணித்திருந்தார்.

வாக்காளர் மாற்றம்: திமுக மற்றும் அதிமுக-வின் பாரம்பரிய வாக்கு வங்கிகளில் இந்த முறை பெரிய ஓட்டை விழுந்துள்ளது. அந்த வாக்காளர்கள் பலரும் தவெக-விற்கு மாறியுள்ளனர்.

மண்டல வாரியான நிலவரம்:
சென்னை: தலைநகர் சென்னையில் தவெக-விற்குப் மிகப்பெரிய செல்வாக்கு பதிவாகியுள்ளது.

கொங்கு மண்டலம்: இங்கு திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய மூன்று கட்சிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டுகின்றன. அதேசமயம் கொங்கு இளைஞர்கள் பலர் 'நாம் தமிழர் கட்சி' பக்கம் சாய்ந்துள்ளனர்.

தெற்கு மண்டலம்: தென் மாவட்டங்களில் எந்தவொரு கட்சிக்கும் சாதகமில்லாமல் கலவையான முடிவுகளே கிடைத்துள்ளன.

யார் அந்த 1.5 கோடி வாக்காளர்கள்?

தமிழகத்தில் உள்ள 2.27 கோடி ரேஷன் அட்டைகளில், சுமார் 1.5 கோடி குடும்பங்களில் ஒருவராவது தவெக-விற்கு வாக்களித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது.

பெண்கள் & இளைஞர்கள்: 'மாற்றம் வேண்டும்' என்ற விருப்பமும் விஜய் மீதான ஈர்ப்பும் பெண்களைத் தவெக பக்கம் இழுத்துள்ளது.

சிறுபான்மையினர்: ஒரு கோடி வரையிலான இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ வாக்காளர்களில் பெரும் பகுதியினர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள்: கடல்சார் பகுதிகளில் வசிக்கும் மீனவ சமூகத்தினர் மற்றும் கிறிஸ்தவ இளைஞர்கள் தவெக-வை ஆதரித்துள்ளதாக ரவி தனது காணொலியில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில் 234 தொகுதிகளில் 107 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சியை அமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படுகிறது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ரவி ஐபிஎஸ் சரியான கருத்துக் கணிப்புகளை நடத்தியுள்ளார் என்றே தெரிகிறது. அவர் இந்த கருத்துக் கணிப்புகளை வெளியிட்ட போது எல்லாருமே அதெப்படி சாத்தியம், எதை வைத்து கருத்துக் கணிப்புகளை நடத்தினார் என்ற கேள்வி எழுந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+