PF விதிகளில் முக்கிய மாற்றம்.. சொந்த வீடு வாங்குவது இனி ரொம்பவே ஈஸி! மத்திய அரசின் கலக்கல் அறிவிப்பு
சென்னை: நம்மில் பலருக்கும் சொந்த வீடு என்பதே லட்சியமாக இருக்கும். பலரும் காலம் முழுக்க சொந்த வீடு வாங்கவே பணத்தைச் சேமிக்கிறார்கள். இதற்கிடையே சொந்த வீடு வாங்கும் ஆசையை அனைவரும் அணுக உதவும் வகையில் பிஎஃப் நிதியில் இருந்து வீடு வாங்கப் பணம் எடுக்கும் செயல்முறையை மத்திய அரசு எளிமையாக்கியுள்ளது.
கடந்த காலங்களில் நாம் நமது வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணத்தை எடுப்பதே மிகவும் கடினமாக இருக்கும். அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தால் அது பிராசஸ் ஆகி பணம் கைக்கு வரவே பல காலம் ஆகும். மேலும், வீடு வாங்குவது உள்ளிட்ட முக்கியமான தருணங்களுக்குப் பணம் எடுக்கலாம் எனப் பார்த்தால் அதற்கும் 1008 கட்டுப்பாடுகள் இருக்கும்.

சூப்பர் அறிவிப்பு
இந்தச் சூழலில் தான் சம்பளதாரர்களுக்கு ஒரு மிகப் பெரிய நிவாரணத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை (EPF) எடுக்கும் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது., இது முதல்முறையாக வீடு வாங்குவோருக்கு மிக பெரியளவில் உதவும். அவர்கள் தேவையான பணத்தைப் புரட்டுவதை இது எளிதாக்கியுள்ளது.
90% வரை எடுத்துக் கொள்ளலாம்
EPFல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரிவு 68-BD-ன் கீழ், சம்பளதாரர்கள் இப்போது ஒரு வீடு அல்லது சொத்தை வாங்குவது, கட்டுவது அல்லது இஎம்ஐ செலுத்துவது ஆகியவற்றுக்குத் தங்களின் பிஎஃப் சேமிப்பில் இருந்து 90% வரை எடுத்துக் கொள்ளலாம். மேலும், முன்பு 5 ஆண்டுகள் பிஎஃப்பிற்கு பங்களித்தால் மட்டுமே வீடு கட்ட பணம் எடுக்க முடியும் என்று விதி இருந்த நிலையில், அதுவும் இப்போது மூன்று வருடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது பிஎஃப் கணக்கு ஆரம்பிக்கப்பட்ட தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது.
சூப்பர் மாற்றங்கள்
இதற்கு முன்பு வரை பிஎஃப் பணத்தைத் திரும்ப எடுக்கக் கட்டுப்பாடுகள் சற்று அதிகமாகவே இருந்தது. அதாவது ஊழியர் பங்களிப்பு மற்றும் முதலாளி பங்களிப்பு மற்றும் வட்டி என அனைத்தையும் சேர்த்து 36 மாதங்களுக்கான தொகையை மட்டுமே எடுக்க முடியும் என்று விதி இருந்தது. அதுவும் கூட பிஎஃப் உறுப்பினராக ஐந்து வருடங்கள் தொடர்ந்து இருந்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று விதி இருந்தது. அவை எல்லாம் தளர்த்தப்பட்டுள்ளது.
ஒரே ஒரு கண்டிஷன்
புதிய விதிகள் பணம் எடுக்கும் விதிகளைத் தளர்த்துகிறது. அதேநேரம் இந்த ஆப்ஷனை பயன்படுத்தி ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு முறை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதர மாற்றங்கள்
இபிஎஃப்ஓ அமைப்பானது பிஎஃப் பணத்தை எடுப்பதை ஒழுங்குபடுத்தவும், விரைவுபடுத்தவும் வேறு சில மாற்றங்களையும் செய்துள்ளது. அதன்படி யுபிஐ மற்றும் ஏடிஎம் வழியாக உடனடி பணத்தை எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 2025 முதல் பிஎஃப் உறுப்பினர்கள் அவசரக்காலத் தேவைகளுக்கு ரூ. 1 லட்சம் வரை உடனடியாகப் பணத்தை எடுக்கலாம்.
முக்கியம்
ஆட்டோமேட்டிக் செட்டில்மெண்ட் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் செட்டில்மெண்ட் தீர்வு வரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சரிபார்ப்பு பிராசஸ் எளிமையாக்கப்பட்டுள்ளது. முன்பு verification parameters என்பது 27ஆக இருந்த நிலையில் இப்போது அது 18ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்போது சுமார் 95% பேரின் பணம் எடுக்கும் கோரிக்கை வெறும் 3-4 நாட்களில் முடித்து வைக்கப்படுகிறது.
கல்வி, திருமணம் மற்றும் மருத்துவம் தொடர்பான பணம் எடுக்கும் பிராசஸ் எளிமை ஆக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஈஸியாக திட்டமிட்டு, பெரிய நிகழ்ச்சிகளைப் பிரச்சினை இல்லாமல் செய்யலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications