ஒன்றுக்கு மேற்பட்ட PPF அக்கவுன்ட்டுகளை வைத்துள்ளீர்களா? அக்டோபர் 1 முதல் 3 முக்கிய மாற்றம்
சென்னை: ஒன்றுக்கும் மேற்பட்ட பிபிஎஃப் கணக்குகள் உள்ளவர்களுக்கு வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலாகின்றன. பொது வருங்கால வைப்பு நிதி எனும் PPF, இந்திய அஞ்சல் துறையால் வழங்கப்படும் சேமிப்பு திட்டமாகும்.
பிபிஎஃப் திட்டம் என்பது ஆண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமாகும். பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் இருப்பதை போல் ஆண்களுக்கு இந்த பிபிஎஃப் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் முதிர்வுக் காலம் 15 ஆண்டுகளாகும்.

நீண்ட காலத்திற்கு தங்கள் நிதியை முதலீடு செய்ய விரும்பினால் இந்த திட்டம் சிறப்பானதாகும். இதற்கு தற்போது வட்டி 7.1 சதவீதம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் ரூ 500 செலுத்தலாம். இதில் அதிகபட்சமாக ரூ 1.5 லட்சம் செலுத்தலாம். மாதந்தோறும் இவ்வளவு தொகைதான் என்றில்லை. ரூ 500 க்கு குறையாமலும் ரூ 1.5 லட்சத்திற்கு மிகாமலும் தங்களுக்கு வரும் பணத்தை செலுத்தலாம். இந்த திட்டம் மத்திய அரசின் திட்டம் என்பதால் இதில் முதலீடு செய்ய அச்சப்பட தேவையில்லை.
இந்த நிலையில் பிபிஎஃப் கணக்குகள், குழந்தைகளுக்கான சிறப்பு அக்கவுன்ட்கள், பல பிபிஎஃப் கணக்கு உள்ளவர்கள், என்ஆர்ஐ உள்ளிட்டோருக்கு புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவற்றில் சில ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்டன. மற்றவை அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். அதில் 3 முக்கிய மாற்றங்கள் உள்ளன. அவை சிறுவர்களுக்கான பிபிஎஃப் அக்கவுன்ட், ஒன்றுக்கு மேற்பட்ட பிபிஎஃப் அக்கவுன்ட், என்ஆர்ஐ க்களுக்கான பிபிஎஃப் அக்கவுன்ட் ஆகும்.
மைனர்களுக்கான பிபிஎஃப்: தற்போது குழந்தைகள் பெயரில் இந்த புதிய கணக்கு தொடங்கப்பட்டு அவர்களின் வருங்காலத்திற்காக சேமிப்பு செய்யப்படுகிறது. இந்த அக்கவுன்ட்டில் இணைந்துள்ள சிறுவன், 18 வயதை அடைந்ததும் பிபிஎஃப் திட்டத்திற்கான வட்டி விகிதம் வழங்கப்படும். அந்த சிறுவன் 18 வயதை அடைந்த பிறகு முதிர்வு காலம் தொடங்கப்படும். அதிலிருந்து 15 ஆண்டுகள் வரை கணக்கைத் தொடரலாம்.
பல பிபிஎஃப் கணக்குகள்: அந்த வகையில் யாரிடமாவது ஒன்றுக்கு மேற்பட்ட பிபிஎஃப் கணக்குகள் இருந்தால் , முதலீட்டாளர்கள் தேர்வு செய்யும் ஏதாவது ஒரு கணக்கு முதன்மை கணக்காக மாற்றிக் கொள்ளலாம். மற்ற அக்கவுன்ட்டுகள் முதன்மை கணக்குகளுடன் சேர்க்கப்பட்டுவிடும். ஒரு வேளை ஒரு நிதியாண்டுக்கு ரூ 1.5 லட்சம் என்ற வரம்பை மீறி மீதத் தொகையானது இரண்டாவது கணக்கில் இருந்தால் அதற்கு எந்த வித வட்டியும் செலுத்தப்படாது. உங்களிடம் உள்ள வேறு எந்த பிபிஎஃப் கணக்குகளுக்கும் கணக்கு தொடங்கியதில் இருந்து ஒரு பைசா கூட வட்டி கிடைக்காது.
என்.ஆர்.ஐ.-களுக்கான கணக்கு: அது போல் என்ஆர்ஐ-களுக்கு (வெளிநாடு வாழ் இந்தியர்கள்) 1968 பிபிஎஃப் திட்டத்தின் கீழ் நீங்கள் செயலில் உள்ள கணக்குகளை வைத்திருந்தால் செப்டம்பர் 30, 2024 ஆம் ஆண்டு வரை வட்டியை பெறுவீர்கள். இருப்பினும் அதன் பிறகு கணக்கில் எந்த வட்டியும் சேராது. இது போன்ற விதிமுறைகளை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications