இரண்டுக்கும் நடுவில்.. வசமாக சிக்கி முழிக்கும் எடப்பாடி.. இப்படி ஒரு பிரச்சனையா? அதிமுகவில் திக்திக்
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பிரஷர் ஒன்று வந்துள்ளதாக அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் உருவாகலாம் என்கிறார்கள், தென்னிந்தியாவில் பாஜக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தொடர் தோல்விகளால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சுமுகமாக போக டெல்லி பாஜக ஆலோசனை செய்து வருகிறதாம்.

2024ல் தமிழ்நாட்டில் கூடுதல் எம்பி இடங்களை வெல்லும் விதமாகவும்.. 2026ல் கூடுதல் சட்டசபை இடங்களை வெல்லும் விதமாகவும் பாஜக எடப்பாடி உடன் சமாதானமாகி செல்ல இருக்கிறதாம். இதற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மூலம் சமாதானம் பேச உள்ளனர்.
அழைப்பு: அதன்படி உத்தர பிரதேசத்தில் கட்டப்படும் ராமர் கோவில் அடுத்த ஜனவரியில் திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு எடப்பாடிக்கு அழைப்பு செல்ல உள்ளது. இந்த அழைப்பிதழ் மூலம் எடப்பாடிக்கு சமாதானம் சொல்ல யோகி வழியாக மோடிக்கு தூது விட மோடி திட்டமிட்டு உள்ளாராம். தேர்தலுக்கு ஜனவரியில் இருந்து 4 மாதமே இருக்கும் நிலையில்.. ஜனவரியில் கூட்டணியை இறுதி செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது,
அதோடு இல்லாமல் அதிமுகவிற்கு 4 எம்பிக்கள் இருந்தால் போது 4 அமைச்சரவை பதவிகளை வழங்குவோம். எங்கள் கூட்டணிக்கு வாருங்கள் என்று பெரிய ஆபர் ஒன்றையும் கொடுத்து உள்ளனராம்.
பிரஷர்: இது இப்படி இருக்க லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பிரஷர் ஒன்று வந்துள்ளதாக அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எடப்பாடி முக்கிய கண்டிஷன் போட்டுள்ளாராம். திமுக இந்த தேர்தலில் வலுவாக உள்ளது. அவர்களை எதிர்க்க ஒரே வழி அதிக காசு இறக்க வேண்டும். 20 கோடிக்கு மேல் பணம் இறக்க முடிந்தவர்கள் மட்டும் தேர்தலில் நிற்கலாம் என்று ஆர்டர் போட்டுள்ளாராம்.
இதன் அடிப்படையில் அவர் வேட்பாளர் லிஸ்டை தயார் செய்ய ரெடியாகிவிட்டாராம். ஆனால் மாவட்ட செயலாளர்களோ மாஜி அமைச்சர்கள் எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இரண்டு தொகுதி வீதம் ஒவ்வொரு மாஜி அமைச்சரும் செலவு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனராம்.
ஆனால் மாஜிக்களோ.. இப்போது எம்பி தேர்தலில் வென்று என்ன செய்ய போகிறோம். பெரிதாக பலன் இல்லாத தேர்தலுக்கு ஏன் செலவு செய்ய வேண்டும் என்று விட்டேத்தியாக இருக்கிறார்களாம். இரண்டு தரப்பிற்கும் நடுவில் சிக்கிக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரஷர் ஏறிவிட்டதாக கூறுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
எம்பிக்கள்: இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலுக்கான பணிகளை கடந்த சில நாட்களாகவே திமுக தீவிரமாக செய்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 38 இடங்களில் வென்றது. புதுச்சேரியில் 1 இடத்தில் வென்றது. இதே வெற்றியை இந்த முறை தமிழ்நாட்டில் பதிவு செய்வதற்கான தீவிரமான பணிகளை திமுக முன்னெடுத்து வருகிறது,.
40க்கு 40 இடங்களில் வெல்ல வேண்டும் என்று டார்கெட் வைத்து திமுக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தல் பணிகள் திமுகவிற்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் மொத்தம் 20 புதிய தலைகள் களமிறக்கப்படலான் என்கிறார்கள். அதாவது திமுகவில் இருந்து 10 புதிய தலைகள், மற்ற கூட்டணி கட்சிகளில் இருந்து 10 புதிய தலைகள் என்று மொத்தம் 20 பேர் களமிறக்கப்படுவார்கள். திமுகவில் எம்பியாக இருக்கும் 10 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications