Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணியிருக்கீங்களா.. 2.24 லட்சம் பேருக்கு நல்ல செய்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ளது. இதன் காரணமாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன கார்டு கிடைக்க போகிறது என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் இருக்கின்றன. மானிய விலையிலும், விலையில்லாமலும் அரிசி சர்க்கரை, பருப்புகள், பாமாயில் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு என்பது வெறும் பொருட்கள் வாங்க பயன்படும் அட்டையாக மட்டுமின்றி, தமிழக அரசின் பல்வேறு சலுகைகள் பெறுவதற்கான அடையாள அட்டையாகவும் உள்ளது

New ration card for 2 24 lakh people Tamil Nadu government good news

தமிழகத்தில் 2006ம் ஆண்டு கலைஞர் டிவி வழங்கப்பட்ட போது ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டது. அடுத்ததாக ஜெயலலிதா காலத்தில் விலையில்லா கிரைண்டர்-மிக்சியும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்குத்தான் வழங்கப்பட்டது. இதேபோல் திருமண உதவி தொகை திட்டம் மற்றும் கர்ப்பிணி உதவி தொகை திட்டத்தில் பெறவும் ரேஷன் கார்டு அத்தியாவசியமானது.

இப்போது முதல்வர் ஸ்டாலின் காலத்தில் வெள்ள நிவாரணம், கொரோனா நிவாரணம், பொங்கல் தொகுப்பு மற்றும் மகளிர் உரிமைத்தொகை ஆகியவை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்குத்தான் வழங்கப்படுகிறது. வருவாய் துறை வழங்கும் சான்றிதழ்களுக்கு ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளதால், முகவரி சான்றாக ரேஷன் கார்டு தான் பார்க்கப்படுகிறது. ரேஷன் கார்டுகளை பொறுத்தவரை கடந்த 2017ம் ஆண்டு முதல் ஸ்மார்ட் கார்டாக மாறிவிட்டது. செல்போன் நம்பருடன் ரேஷன் கார்டு இணைக்கப்பட்டது.

மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கு முன்பு அனைத்து ரேஷன் கார்டுகளும் ஆதார் உடன் இணைக்கப்பட்டது. குடும்பத்தில் உள்ள அனைவரது ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டுள்ளதால், குடும்பத்தில் உள்ள யார் வாகனம் வாங்கினாலும் சரி, பெரிய இடம் வாங்கினாலும் சரி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் இருந்தாலும் சரி ஒட்டுமொத்தமாக ஒரு குடும்பத்தின் வருமானம் எவ்வளவு என்பதை அரசால் எளிதாக அறிய முடிகிறது. அதை அடிப்படையாக வைத்து தான் மகளிர் உரிமை தொகை ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது..

இதனிடையே ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமை தொகை வழங்கப்படுவதால், புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகமானது. அதாவது ஒரு குடும்பத்தில் இருக்கும் மாமியார், மருமகள் இருவரும் மகளிர் உரிமைத்தொகை பெற வேண்டும் என்பதற்காக ஒரே வீட்டில் இருந்தாலும், புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினார்கள்.

2022-ம் ஆண்டில் 2 கோடியே 20 லட்சம் ஆக இருந்த ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை கடந்த ஓராண்டாக நிறுத்திவைக்கப்பட்ட காரணத்தால் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் என்ற நிலையில் உள்ளது, இதற்கிடையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் காரணமாக குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களை பிரித்து கொண்டு புதிய ஸ்மார்ட் கார்டுக்கு பலரும் விண்ணப்பிக்க தொடங்கினர். அதனால் புதிய கார்டுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி நடந்தது.

கடந்த ஓராண்டில் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு பல மாதங்களாக கார்டுகள் வழங்கப்படாத நிலையில், தேர்தலுக்கு ஒரு மாதம் முன்புதான் ஸ்மார்ட் கார்டு ஒப்புதல் ஆகிவிட்டது என்ற குறுஞ்செய்தி சிலருக்கு வந்தது. ஆனால் தேர்தல் காரணமாக அவர்களுக்கு கார்டுகள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் தேர்தல் நடைமுறைகள் வருகிற ஜூன் மாதம் 5-ந் தேதி விலக்கி கொள்ளப்பட்ட பின்பு அனைத்து மாவட்டங்களிலும் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளது. இதன் காரணமாக விண்ணப்பித்துள்ள 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கும் புதிய ரேஷன் கார்டு கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் ஜூன் மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு தொலைந்தவர்கள் மற்றும் திருத்தம் செய்தவர்களுக்கும் புதிய ஸ்மார்ட் கார்டு தடையின்றி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் பொதுமக்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் பெற https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் நேரடியாக விண்ணப்பம் செய்யலாம். அல்லது இசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் நகல் ஸ்மார்ட் கார்டு, கார்டில் புதிய உறுப்பினர்களை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்ப தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்கம் போன்ற அத்தனை சேவைகளையும் மிக எளிதாக செய்யலாம். ஜூன் மாதம் முதல் உடனுக்குடன் அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பார்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+