அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! இன்று முதல் அமலுக்கு வந்த புது ரூல்ஸ்! ஃபுட் டெலிவரிக்கு நோ!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பல்கலைக் கழக வளாகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக உணவு டெலிவரி செய்யும் நபர்களுக்கு பல்கலைக்கழக வாயில் வரை மட்டுமே அனுமதி, மாணவர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம் என்பன உள்ளிட்ட பல விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர் போலீசார்.

மேலும் இது தொடர்பாக சென்னையில் பிரியாணி கடை நடத்தி வருபவரும், திமுகவை சேர்ந்தவருமான ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பல்கலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சுற்றறிக்கையாக பதிவாளர் வெளியிட்டிருந்தார். அதில்,"பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அனைத்து தெருவிளக்குகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் முழுமையாக செயல்படுகின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டும், ஹெல்ப் டெஸ்க் செயல்படுவதையும் மாணவர்களுக்கு உதவ போதுமான பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
வெளிநபர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்கு வருவதை கட்டுப்படுத்த வேண்டும். ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும், வெளிநபர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நடை பயிற்சிக்காகவோ அல்லது வேறு கல்வி சாரா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் தங்கள் அடையாள அட்டைகளை எல்லா நேரங்களிலும் அணிந்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
மேலும் மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் உடனடியாக அதனை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் செமஸ்டர் தேர்வு முடிந்து இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் தொடங்கியதை தொடர்ந்து மாணவர்கள் வருகை தந்தனர். இதை அடுத்து பதிவாளர் விதித்திருந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது.
குறிப்பாக மாணவர்கள் சிறப்பு வகுப்புகளுக்காக பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும், காவலன் உதவி செய்து செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவன ஊழியர்கள் பல்கலைக்கழக வாயில் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டிருந்தது. மேலும் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பல்கலைக்கழகத்தில் தங்குவதை தங்குவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து இந்த விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பாதுகாவலர்கள் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அடையாள அட்டை சரி பார்க்கப்பட்ட பிறகு மாணவர்கள் பேராசிரியர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்கலைக்கழகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகள் தொடர்ந்து பதிவு செய்யப்படுவதோடு கண்காணிக்கப்பட்டும் வருகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications