ஓய்வூதியர்களின் வாழ்நாள் சான்றை இனி இங்கு தான் கொடுக்க வேண்டும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அரசு ஓய்வூதியர்கள் இனி வாழ்நாள் சான்றிதழ்களை சென்னை அல்லது மாவட்ட கருவூலங்களில் தான் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியர்களின் விவரங்கள் பராமரிப்பு கருவூலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதால் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :
தமிழ்நாடு அரசின் ஓய்வூதியர்களின் சில பொதுத்துறை வங்கி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வரை வங்கிகளில் நேரடியாக ஓய்வூதியம் பெற்று வந்தனர். அந்த ஓய்வூதியர்கள் இதனால் பல சிரமங்களை சந்தித்து வந்தனர். அவர்களுடைய சிரமங்களை குறைக்கும் பொருட்டு அவர்களது நலன் காக்கும் பொருட்டும் பொதுத்துறை வங்கி திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறும் சுமார் 70,000 தமிழக அரசின் ஓய்வூதியர்கள் தமிழக அரசின் ஆணைப்படி இந்த வருடம் முதல் அவர்கள் கருவூலத் துறை மூலமாக ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

New rules for pensioners to submit life certificate

அவர்கள் தற்போது தமிழகத்தில் உள்ள மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் சென்னை அலுவலகங்களில் மூலமாக ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். மேலும் பொதுத்துறை வங்கித் திட்டத்தில் உள்ள தமிழக அரசு ஓய்வூதியர்கள் கடந்த ஆண்டு வரை நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தங்களது வாழ்நாள் சான்றினை தாங்கள் ஓய்வூதியம் பெற்று வந்த வங்கிகளில் அளித்து வந்தனர். தற்போது அந்த ஓய்வூதியர்கள் அனைத்து பதிவேடுகளும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் கருவூலங்களுக்கு மாற்றப்பட்டு விட்டதால் இந்த வருடத்திற்கான தங்களது வாழ்நாள் சான்றினை ஓய்வூதியம் பராமரிக்கும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் சென்னை மற்றும் மாவட்ட கருவூலங்களில் வருகின்ற 1. 4 .2019 முதல் 3.6 .2019 வரை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

New rules for pensioners to submit life certificate

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+