ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வீடு தேடி வருது.. பணிகள் செம ஸ்பீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. அந்தவகையில், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடும் பணிகள் துரிதமாகியிருக்கின்றன.

பெண்களுக்கு உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023ம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

new Ration Card Tamil Nadu Tirupur

விண்ணப்பம்: இந்த திட்டத்தை அறிவித்தபோது, தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்தது என்றாலும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், புதிதாக விண்ணப்பிப்பவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் மீண்டும் இணைக்கப்பட்டு வருகின்றனர்.. இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டும் வருகிறது.

ஆனால், ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்த சுமார் 3 லட்சம் பேருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அவை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் வெடிக்க துவங்கின.. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காகவே, புதிதாக விண்ணப்பித்த ரேஷன்தாரர்களுக்கு, ரேஷன் அட்டைகளை வழங்கப்படாமல் உள்ளதாக அதிருப்திகளும் கிளம்பின..

அதிகாரிகள் நம்பிக்கை: லோக்சபாதேர்தல் முடிந்துவிட்ட நிலையில், எப்படியும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள், புதிய ரேஷன் கார்டுகள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை ராதாகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்பு உறுதி தந்திருந்தார்.. எனினும் இதுகுறித்த அறிவிப்பு எதுவுமே வெளிவரப்படாமல் இருக்கிறது.

இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்றைய தினம்கூட ஒரு கோரிக்கை விடுத்திருந்தார்.. குடும்பத் தலைவிகளுக்கான மாத உரிமைத் தொகைக்கு அதிக எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பம் செய்வதை தவிர்க்கவே புதிய குடும்ப அட்டைகள் விநியோகத்தை தமிழக அரசு தாமதிக்கிறதா? புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.

புதிய கார்டுகள்: இந்நிலையில் ஒரு குட்நியூஸ் வெளியாகியிருக்கிறது.. புதிய கார்டு கேட்டு சுமார் 2.80 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதால், இதில் சரியான நபர்களை கண்டறியும் பணிகள் துரிதமாகியிருக்கிறதாம்.. எனவே, ஒரு சில வாரங்களில் புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுவது தொடர்பாக அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

எனவே, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போருக்கு ஆதார் கார்டு கட்டாயம் தேவை. இருப்பிடச் சான்று மற்றும் அடையாளச் சான்றுக்கு ஆதார் கார்டு அவசியம். முகவரி சான்றாக கேஸ் சிலிண்டர் பில் தேவை.. முக்கியமாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் சமயத்தில் கடைசி மூன்று மாதங்களுக்குள் சிலிண்டர் வாங்கியிருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையும் அவசியம்.. இந்த ஆவணங்கள் எல்லாம் இருந்தால்தான் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

திருப்பூர் ஜரூர் வேகம்: புதிய ரேஷன் கார்டுகளை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டத்தில் வேகம் அதிகரித்துள்ளது. இங்கு, புதிய ரேஷன் கார்டு கோரும் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் துரிதமாகியிருக்கின்றன.

அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு, புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணி, கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து மாவட்ட வழங்கல் பிரிவினர் சொன்னதாவது:

விண்ணப்ங்கள்: புதிய ரேஷன் கார்டு கோரும் விண்ணப்பங்கள், பல்வேறு வகைகளில் அலசி ஆராயப்படுகிறது. குறிப்பாக, ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனரா? ஒரே குடும்பத்தில் வசிப்போர், பெயர் நீக்கம் செய்து, தனித்தனி கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனரா? என்றெல்லாம் ஏற்கனவே உள்ள தரவுகள் அடிப்படையில் பரிசீலிக்கப்படுகிறது.

சந்தேக விண்ணப்பங்கள் மீது, கள ஆய்வு நடத்தி, உறுதி செய்யப்படுகிறது. தகுதியுள்ள விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படுகின்றன. மாவட்டத்தில் 3,800 புதிய ரேஷன் கார்டு கோரும் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மெசேஜ் வரும்: அவற்றில் இதுவரை, 1,400 புதிய கார்டு அச்சிடும் பணி முடிவடைந்துள்ளது. மீதமுள்ள கார்டு அச்சிடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அந்தந்த தாலுகா வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு கார்டுகள் அனுப்பிவைக்கப்படும். இதுகுறித்த SMS அடிப்படையில் சென்று, கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம்" என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+