இது வேற லெவல் அரசியல்.. எங்கேயோ போயிருச்சு தமிழ்நாடு.. எம்எல்ஏக்களை அலற விடும் வீடியோக்கள்!
சென்னை; அரசியலில் புது ஸ்டைல் உருவாகி உள்ளது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தங்களுக்குள் ஒரு ஐடி விங்கை உருவாக்கி ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வீடியோக்களை வெளியிடுவது அதிகரித்து வருகிறது. அவர் முன்பு இப்படி பேசினார். இப்போது இப்படி பேசுகிறார்.. அவர் இதை செய்யவில்லை. அதை செய்யவில்லை என்று வீடியோக்கள் அதிகமாக வெளியிடப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளதால் அதிமுக, திமுகவினர் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர். அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலினும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கிவிட்டனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளும் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்து வருகிறார். அதேநேரம் திமுகவினரின் விமர்சனங்கள் எப்படியெல்லாம் வரும் என்பதற்கு தகுந்தாற் போல் வியூகம் வகுத்தும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்
இதேபோல் முக ஸ்டாலினும் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் ஒவ்வொரு ஊராக சென்று குறைகளை கேட்டார். அதன்பிறகு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் ஊர் ஊராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகளை மையப்படுத்தி, மக்களின் குறைகளை கேட்டு வருகிறார்.

தினசரி வீடியோக்கள்
வழக்கமா பிரச்சார முறைகளை காட்டிலும், இப்போது புதிய புதிய முயற்சிகளில் அரசியல் கட்சிகள் இறங்கி உள்ளன. திமுகவினர், ஆளும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக ஐடி விங்க் மூலம் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அந்த வீடியோவில் ஆளும் கட்சியினர் செய்யாமல் விட்ட குறைகளை சுட்டிக்காட்டுகிறார்கள். பொதுமக்களை பேச வைத்து அவர்கள் மூலம் அவர்கள் செய்யதவறிய குறைகளை சொல்ல வைக்கிறார்கள், தினசரி இப்படி உருவாக்கப்படும் வீடியோக்கள் ஆளும் அதிமுக எம்எல்ஏக்களை திணறடித்து வருகிறது.

பொய் பிரச்சாரம்
இது ஒருபுறம் அதிமுக தரப்பினரும் ஸ்டாலின் உள்ளிட்ட பல திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராகவும் வீடியோக்களை உருவாக்கி பரப்பி வருகிறார்கள். எதிர்க்கட்சியினர் பொய் பிரச்சாரம் செய்வதாகவும் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத வாக்குறுதிகளை கூறி பிரச்சாரம் செய்வதாகவும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

திணறும் எம்எல்ஏக்கள்
எல்லாவற்றுக்கும் மேலாக நையாண்டி மீம்கள், நையாண்டி வீடியோக்கள்அதிக அளவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்பினர் உருவாக்கி மக்களிடம் தினசரி பரப்பி வருகிறார்கள். சிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆவது நடக்கிறது. பிரச்சாரங்கள் இப்படி ஹைடெக்காக மாறிப்போனதால் டிசைனர்கள் மற்றும மீம் கிரியேட்டர்கள் மற்றும் வீடியோ எடிட்டர்களுக்கு குறுகிய காலத்தில் பெரிய அளவில் டிமாண்ட் அதிகரித்திருப்பதும் உண்மை. தினசரி புதுசு புதுசாக யோசித்து வீடியோக்களை உருவாக்கி வைரல் செய்தவால் எம்எல்ஏக்கள் எல்லோரும் திணறித்தாய் போய் உள்ளார்கள்.
-
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்?












Click it and Unblock the Notifications