தமிழ் உச்சரிப்பில் புதிய ஆங்கில பெயர்களுடன் கூடிய தமிழக வரைபடம் வெளியீடு
சென்னை: தமிழ் உச்சரிப்புடன் கூடிய புதிய ஆங்கில பெயர்களில் மாவட்டங்களை எழுதி தமிழக அரசு மாவட்ட வாரியான வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு அண்மையில் ஆயிரத்திற்கும் அதிகமான ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வார்த்தையாக மாற்றியது.
வெள்ளைக்காரர்களின் வாயில் உச்சரிக்க முடியாததால் மாறிப்போன பெயர்களை தமிழ் உச்சரிப்பிலேயே இனி எழுத வேண்டும் என்றும் தமிழ் உச்சரிப்பில் தான் பேச வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

வேலூர்
உதாரணமாக coimbatore என்று அழைக்கப்பட்ட கோயம்புத்தூர், தமிழில் உள்ளது போலவே koyampuththoor என மாற்றப்பட்டுள்ளது. இதேபோல் vellore என அழைக்கப்பட்டு வந்த வேலூர், உச்சரிப்பில் உள்ளது போலவே veloor என மாற்றப்பட்டுள்ளது, tanjoavore என அழைக்கப்பட்ட தஞ்சாவூர் தற்போது thanjavoor v என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்
madurai என அழைக்கப்பட்ட மதுரை இப்போது உச்சரிப்பில் உள்ளவாறு mathurai என்று மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. dindigul என அழைக்கப்பட்ட திண்டுக்கல் இப்போது thindukkal என மாற்றப்பட்டுள்ளது. விழுப்புரம் இதுவரை villupuram என்று அழைக்கப்பட்ட நிலையில் இனி vizhupuram என மாற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி
erode என அழைக்கப்பட்ட ஈரோடு, உச்சரிப்பில் உள்ளவாறு erodu என்று மாற்றப்பட்டுள்ளது. tirupur என அழைக்கப்பட்ட திருப்பூர், இப்போது உச்சரிப்பதை போலவே tiruppoor என மாற்றப்பட்டுள்ளது. இதேபோல் கரூர் தற்போது karur என்பதில் இருந்து karoor என மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி இதுவரை dharmapuri என அழைக்கப்பட்ட நிலையில் இப்போது tharmapuri என்று மாற்றப்பட்டுள்ளது. tutucorin என அழைக்கப்பட்ட தூத்துக்குடி இப்போது உச்சரிப்பில் உள்ளது போ thooththukkudi என மாற்றப்பட்டுளளது.

பெயர் மாறாத மாவட்டங்கள்
இப்படியாக பல்வேறு மாவட்டங்களின் பெயர்கள் மாற்றி புதிய தமிழ்நாடு வரைபடத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் தேனி, சென்னை, சேலம், தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், உள்ளிட்ட சில மாவட்டடங்களின் பெயர்கள் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications