பட்ஜெட் 2024.. ரயில்வே தொடர்பான நிர்மலா சொன்ன மேஜர் அறிவிப்பு.. அதுவும் வந்தே பாரத்.. நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயிலின் தரத்திற்கு உயர்த்தப்படும். மேலும் சில நகரங்களுக்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும். இதனால் மக்களின் பயணம் எளிதாகும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார் தனது பட்ஜெட் உரையில், மோடி பிரதமரான பின்னர் 600 பில்லியன் டாலர் அளவுக்கு நேரடி அந்நிய முதலீடு வந்துள்ளது; இடைக்கால பட்ஜெட்டின் மொத்த வருவாய் 30.8 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பு. அதில் நிதிப் பற்றாக்குறை 5.8%; நாட்டின் மொத்த கடன் 14லட்சம் கோடியாக உள்ளது;

New Vande Bharat to be launched soon says Minister Nirmala Sitharaman in Union budget 2024-25 speech

நேரடி வரி வருவாய் வசூல் கடந்த 5 ஆண்டுகளில் 3மடங்காக அதிகரித்துள்ளது; பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் வருமான வரி தாக்கல் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3000 ஐ.டி.ஐக்கள் தொடங்கப்பட்டுள்ளன. பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். 9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும்

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்; ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள். நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்.

முதன்மை சுற்றுலாத் தளமாக லட்சத்தீவுகள் மேம்படுத்தப்படும்; ஆன்மீக சுற்றுலா மேம்படுத்தப்படும்; மின்சார வாகன உற்பத்தி மற்றும் சார்ஜிங் மையங்கள் ஊக்குவிக்கப்படும். இந்தியாவில் செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை 80-ஆக அதிகரிப்பு. அடுத்த 5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சி இருக்கும். 4 தரப்பு முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. சமூக நீதியே பாஜக அரசின் பிரதான நோக்கம். 2024-ல் புதிய இந்தியாவை படைப்போம் சமூக நீதியே பாஜக அரசின் பிரதான நோக்கம். 2047ல் புதிய இந்தியாவை படைப்போம்.

517 நகரங்களில் சிறு விமான நிலையங்கள் அமைக்கப்படும்; 1000 விமானங்கள் புதிதாக வாங்கப்படும்". கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஊழல் எதிர்ப்புக்கும், வாரிசு அரசியலுக்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம்.

சீர்திருத்தம் , செயலாக்கம், மாற்றம் ஆகியவையே பிரதமர் மோடி அரசின் தாரக மந்திரம்; ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படும்; ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை உருவாக்க 1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும்; 5 ஒருங்கிணைந்த கடல்சார் பூங்கா அமைக்கப்படும், என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத்: அவர் தனது பேச்சில் 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயிலின் தரத்திற்கு உயர்த்தப்படும். மேலும் சில நகரங்களுக்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும். இதனால் மக்களின் பயணம் எளிதாகும்.

மாநிலங்களுக்கு வழங்கப்படும் 50 ஆண்டுகளுக்கான வட்டி இல்லா கடன் உதவி வழங்கும் திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 1.3 லட்சம் கோடி வழங்கப்படும். வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும்.

மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக்குழு அமைக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் 500 மில்லியனுக்கும் அதிகமான அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+