அண்ணா முடியல.. தண்ணி குடுங்க! தொண்டர்கள் கதறித் துடிக்க.. கண்டுக்காம திரும்பிய விஜய்! கொடூர வீடியோ!
கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த கோர விபத்தின் போது தொண்டர்கள் உயிருக்கு போராடிய புதிய வீடியோ வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. பிரச்சாரத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது, கூட்டநெரிசலில் சிக்கியவர் உதவி கேட்டு கூக்குரல் எழுப்பிய போதும், தண்ணீர் பாட்டில்களை தூக்கி எறிந்து விட்டு பேருந்தின் மறுபக்கம் போய் விஜய் நின்று கொண்ட காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் தளத்தை உலுக்கிய கரூர் துயர சம்பவம் இன்னும் மக்களின் நினைவிலிருந்து மறைந்துவிடவில்லை. செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழ் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் ரோட் ஷோவில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதில் 11 பேர் குழந்தைகள் என்பதே மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், செப்டம்பர் 13ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மாநிலத்தின் பல மாவட்டங்களில் தனது தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்தித்து வருகிறார்.

கரூர் கூட்ட நெரிசல்
இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பேருந்தில் விஜய் பயணம் செய்து, வாகனத்திலிருந்தபடியே மக்களிடம் உரையாற்றுகிறார். முதல் நிகழ்ச்சி திருச்சியில், அதன் பிறகு நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் நடைபெற்றது. செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் திட்டமிடப்பட்டது. அன்றைய தினம், நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்த விஜய், மாலை 7 மணியளவில் கரூரை வந்தடைந்தார். ஆனால் அவர் வருகை தந்த உடனே கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. அதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
41 பேர் உயிரிழப்பு
இதில் 11 பேர் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பதே மக்களை கண்கலங்க வைத்தது. உயிரிழந்தவர்களில் சிலர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், பெரும்பாலோர் பொருளாதார ரீதியில் மிகவும் சாதாரண நிலையில் வாழ்ந்து வந்தவர்கள். குடும்பத்தலைவர்கள் தினசரி கூலிப்பணியால் வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள் என்பதால், இழப்பின் தாக்கம் அவர்களுக்கு அளவிட முடியாததாக உள்ளது. மிகவும் வேதனையாக, உயிரிழந்த குழந்தைகளில் சிலர் தங்கள் பெற்றோருடன் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள்.
கூட்ட நெரிசல் வீடியோ
அதைவிட சோகம் உயிரிழந்த குழந்தைகள் மூச்சு விட கூட முடியாமல், உள் உறுப்புகள் கடும் சேதமடைந்து தங்கள் உயிரை இழந்தது தான். மேலும் பல குடிக்க நீர் கூட இல்லாமல் தங்கள் இன்னுயிரை இழந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் நெரிசல் ஏற்பட்டபோது பதிவு செய்யப்பட்ட பல வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பெரும்பாலும் விஜய் மீது தவறு இருப்பதையே அந்த வீடியோக்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உதவி கேட்டு கூக்குரல் எழுப்பிய போது தண்ணீர் பாட்டில்களை தூக்கி எறிந்து பேருந்தின் மறுபக்கம் போய் நின்று கொண்ட விஜய்!வெளியானது புதிய வீடியோ!#TVKVijay #KarurStampede #OneIndia #PoliticsToday #TamilOneindia pic.twitter.com/xRAN3DKyDs
— Oneindia Tamil (@thatsTamil) October 8, 2025
தொண்டர்கள் கூக்குரல்
விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில் பிரச்சார பேருந்துக்கு அருகே நின்றவர்கள் உதவி கேட்டு கூக்குரலிட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. மேலும் அவர்களை கேட்டு விஜய் தண்ணீர் பாட்டில்களை வீசியதோடு நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்து கொண்டு பேருந்தின் மறுபக்கத்துக்கு சென்ற வீடியோ தற்போது பொதுவெளியில் வெளியாகி கடும் கண்டனங்களை பெற்று வருகிறது. "அண்ணா காப்பாத்துங்க.. பிரச்சனையா இருக்கு முடியல" என அங்கிருந்த தொண்டர்கள் கூக்குரல் எழுப்ப எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் விஜய் பேருந்தின் மறுபுறம் சென்று அங்கிருந்த மக்களை பார்த்து பேசி வருகிறார்.
அதிர்ச்சி வீடியோ
கூட்டத்தில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்தும் போலீசார் அவர்களை காப்பாற்ற முயன்றதும் இந்த வீடியோவில் தெரிய வந்திருக்கிறது. இதுவரை வெளியான வீடியோக்களை விட இந்த வீடியோ மனதை உருக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications