"சென்னையில் இடிக்கப்பட்ட இடத்திலேயே புதிய விநாயகர் கோவில்".. ஹைகோர்ட்டில் அறநிலையத்துறை ஒப்புதல்
சென்னை: சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் இடிக்கப்பட்ட பிள்ளையார் கோவில் மீண்டும் கட்டிக் கொடுக்கப்படும் என அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பிள்ளையார் கோவிலை காணவில்லை என தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் வஉசி நகர் உள்ளது. இங்கு பழமை வாய்ப்பு செல்வ சுந்தர விநாயகர் கோவில் இருந்தது. பொதுமக்கள் இந்த கோவிலில் தரிசனம் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தான் திடீரென்று அந்த கோவில் மாயமானது. அதாவது கோவில் இடிக்கப்பட்டது. இதையடுத்து செல்வ சுந்தர விநாயகர் கோவில் அகற்றப்பட்டு அந்த இடத்தில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே தான் விநாயகர் கோவிலை காணவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது
சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் வ.உ.சி. நகரில் அமைந்திருந்த செல்வ சுந்தர விநாயகர் கோவிலை காணவில்லை எனவும், நூறாண்டு பழமையான இந்த கோவிலை இடித்து விட்டு, அங்கு மாநகராட்சி, குப்பை தொட்டிகளை வைத்துள்ளதாக கூறி சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் அருண் நடராஜன், கோவில் அமைந்திருந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு விட்டது. அந்த இடத்தில் மீண்டும் கோவில் கட்டிக் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதை பதிவு செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications