டிசம்பர் 31ல் ஸ்விக்கி, ஜொமாட்டோ, ஜெப்டோ டெலிவரிகள் கிடையாது! ஊழியர்கள் ஸ்ட்ரைக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்காக டிசம்பர் 31 ஆம் தேதி முதலே டெலிவரி சேவைகள் நிறுத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு முடிய இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகிறார்கள். தற்போது கிறிஸ்துமஸ், நியூ இயர் விடுமுறை என்பதால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளியூர்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் சென்றுள்ளனர்.

new year 2025 swiggy zomato 2025

டிசம்பர் 31 ஆம் தேதி மாலை முதல் ஆங்காங்கே கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கும். அந்த நாள் முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை பலர் ஆர்டர் செய்து உணவுகளை உண்டு மகிழ்வார்கள்.

குடும்பத்தினருடன், உறவினர்களுடன், நண்பர்களுடன் வெளியில் இருந்து உணவை வாங்கி உண்பார்கள். அதிலும் பக்கெட் பிரியாணி, சிக்கன் 65, தந்தூரி உள்ளிட்ட உணவு வகைகள் அதிகம் பேரால் ஆர்டர் செய்யப்படும். சைவம் சாப்பிடுவோர் முந்திரி பிரியாணி, குங்குமப்பூ பிரியாணி, ஹைரதாபாத் பிரியாணி, வெஜ் பிரியாணி, பன்னீர் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை ஆர்டர் செய்து மகிழ்வார்கள்.

இதனால் டாஸ்மாக்கை போல இந்த இரு நாட்களில் ஹோட்டல்களில் கலெக்ஷனும் களைகட்டும். இந்த நிலையில் ஸ்விக்கி, ஜொமாட்டோ, செப்டோ, பிளிங்கிட் உள்ளிட்ட உடனடி டெலிவரி சேவைகள் முழுமையாக அல்லது பகுதி அளவில் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதனால் வீட்டில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்த பலருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெலிவரி, ஒப்பந்த பணியாளர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம்தான். டிசம்பர் 25 ஆம் தேதி ஒரு கட்டமாக போராட்டம் நடந்த நிலையில் டிசம்பர் 31 ஆம் தேதி மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

ஸ்விக்கி, ஜொமாட்டோ, செப்டோ, பிளிங்கிட், அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இ காமர்ஸ் தளங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள், தங்களின் வேலைச்சூழல் மற்றும் ஊதிய முரண்பாடுகளுக்கு எதிராக இந்த போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

புத்தாண்டு போன்று நிகழ்வுகளில் பணிச்சுமை பல மடங்கு அதிகரிப்பதாகவும் அதற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்றும் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த போராட்டத்தின் மூலம் வெளிப்படையான, நியாயமான ஊதிய முறை, 10 நிமிட டெலிவரி போன்ற ஆபத்தான நடைமுறைகளை ரத்து செய்தல், காரணமில்லாத ஐடி பிளாக் செய்தல், அபராத விதிகளை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு உபகரணங்கள், நிரந்தர வேலைவாய்ப்பு, மரியாதையாக நடத்தல், நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம், ஓய்வு நேரம், மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு, ஓய்வூதியம் போன்ற நலத்திட்டங்களையும் ஊழியர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+