புத்தாண்டு 2022: பழ அலங்காரத்தில் ஸ்ரீலட்சுமி சாய்பாபா.. சென்னையில் வீற்றிருக்கும் 72 அடி உயர சிலை!
சென்னை: புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை முகப்பேரில் ஸ்ரீலட்சுமி சாய்பாபா திருக்கோயிலில் பாபாவுக்கு பழ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
2020, 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா, ஓமிக்ரானுடன் பல்வேறு கஷ்டங்களை மக்கள் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அனுபவித்துவிட்டார்கள். இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு முடிந்து நேற்று முதல் 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு தொடங்கியது.
பொதுவாக ஆங்கில புத்தாண்டாக இருந்தாலும் சரி தமிழ் புத்தாண்டாக இருந்தாலும் சரி பெரும்பாலானோர் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வரும் ஆண்டு நன்றாக அமைய வேண்டும் என பிரார்த்தனை செய்வர்.

ஓமிக்ரான்
கொரோனா, ஓமிக்ரானுக்கு மத்தியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்த போதிலும் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்திருந்தனர். அந்த வகையில் அவரவர் விருப்பத்தின் பேரில் வழிபாட்டுத் தலங்களில் வழிபாடு நடத்தினர்.

புத்தாண்டு பிறப்பு
நிறைய கோயில்களில் புத்தாண்டு பிறப்பையொட்டி கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் பூஜைகள் தொடங்கின. அதன்படி சென்னை முகப்பேரில் உள்ள ஸ்ரீ லட்சுமி சாய்பாபா கோயிலில் புத்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நெற்குன்றம் பாலத்திற்கு அருகே உள்ள இந்த கோயிலில் 72 அடி உயர சாய்பாபா வீற்றிருக்கிறார்.

லட்சுமி சாய்பாபா
உள்ளே மூலவரான சாய்பாபா லட்சுமி சாய்பாபா என அழைக்கப்படுகிறார். அது போல் இந்த கோயிலில் லட்சுமி கணபதி, குரு பகவான், லட்சுமி, துர்க்கை, அனுமன், நவகிரகங்கள் ஆகியவற்றுக்கும் சன்னதி உள்ளன. இந்த கோயிலில் உள்ள மூலவர் லட்சுமி சாய்பாபாவிற்கு ஆப்பிள், கிரீன் ஆப்பிள், மாதுளை, சாத்துக்குடி, ஆரஞ்சு, பைன் ஆப்பிள், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மக்கா சோளம்
அது போல் கரும்பு, மக்கா சோளம், இளநீர் உள்ளிட்டவைகளும் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்பட்டிருந்தன. கோயிலின் உள்ளே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த கோயிலில் பாக்கெட் சைஸ் காலண்டரும் லட்சுமி சாய் பாபாவுக்கு அபிஷேகம் செய்த ஒரு ரூபாய் காசும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications