உயிருக்கு போராடும் ஒன்றரை மாத குழந்தை.. உயிரை காப்பாற்ற உதவி செய்யுங்கள்
சென்னை: திருவள்ளூர் அருகே பிறவி இதயநோயால் உயிருக்கு போராடும் பச்சிளம் ஆண் குழந்தையின் உயிரை காப்பாற்ற உடனே அறுவை சிகிச்சை செய்வது அவசியம். இதற்கு 4 லட்சம் ரூபாய் செலவு ஆகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதால், குழந்தையின் உயிரை காக்க உங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்யுங்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி பிரசாந்த் - தேன்மொழி. இந்த தம்பதிக்கு கடந்த ஒன்றறை மாதத்திற்கு முன்பாக அழகான ஆண் குழந்தை பிறந்தது. எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்த பிரசாந்த் - தேன்மொழி தம்பதிக்கு குழந்தை பிறந்த ஒன்றரை மாதத்தில் பேரதிர்ச்சி காத்திருந்தது.

குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதால், மருத்துவர்களிடம் எடுத்து சென்று பரிசோதனை செய்தனர். இதில், குழந்தைக்கு இருதய பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பிறவி இதயக் குறைபாடான தடைபடாத சுப்ராகார்டியாக் TAPVC (Total Anomalous Pulmonary Venous Connection) பாதிப்பு கண்டறியப்பட்டது. அரிதான இந்த நோய் பாதிப்பு இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை பாதிக்கும்.

இதனால் சிறுவன் உயிர் பிழைக்க அறுவை சிகிச்சை செய்வது கட்டாயம் ஆகும். குழந்தையின் தந்தை பிரசாந்த் தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக உள்ளார். அவருக்கு தினமும் வெறும் 500 மட்டுமே சம்பளம் ஆகும். தேன்மொழி ஹவுஸ் ஒயிப் ஆவார். வீட்டில் வருமானம் ஈட்டும் ஒரே நபர் பிரசாந்த் தான். அவரது வருமானமும் அன்றாட குடும்ப செலவுகளை ஈடுகட்டவே போதுமானதாக உள்ளது.
இந்நிலையில், குழந்தையின் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்கு ரூ.4 லட்சம் செலவு ஆகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். சென்னை மியாட் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. அறுவை சிகிச்சை, ஐசியூ கேர், மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை எடுப்பதற்கான செலவுகள் என அனைத்திற்கும் சேர்த்து ரூ.4 லட்சம் ஆகும்.

சாதாரண பின்புலத்தை கொண்ட பிரசாந்த் குடும்பத்தினரால் இவ்வளவு தொகையை திரட்டுவது என்பது இயலாத காரியம். இதனால், உங்கள் உதவியை எதிபார்ப்பதை விட அவர்களுக்கு வேறு வழி எதுவும் இல்லை. பச்சிளம் குழந்தையின் உயிரை காக்க சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லாததால் மிகவும் வேதனையில் பிரசாந்த்- தேன்மொழி தம்பதி இருந்து வருகிறார்கள்.
பல தூங்கா இரவுகளுடன், வற்றாத கண்ணீருடன் அவர்கள் தங்கள் நாட்களை கடத்தி வருகிறார்கள். இந்த இக்கட்டான நிலையிலும் நம்பிக்கையுடன் காத்திருக்கும் அவர்களது குழந்தையின் அறுவை சிகிச்சை செலவுக்காக உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். எவ்வளவு சிறிய உதவி என்றாலும் பரவாயில்லை. நீங்கள் செய்யும் சிறிய உதவி கூட மிகவும் பெரியது.

நீங்கள் செய்யப்போவது வெறும் நிதி உதவி இல்லை. பச்சிளம் குழந்தையின் உயிரை காக்க அளிக்கும் உதவியாகும். அந்த குழந்தை வளர்ந்து வளமான வாழ்க்கை வாழ நீங்கள் செய்யப்போகும் உதவி உறுதுணையாக இருக்கும். உங்களின் பங்களிப்பு, எவ்வளவு சிறியதாக இருந்தாலும், பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். நீங்கள் செய்யப்போகும் உதவி, அந்த தம்பதியினரின் துயரத்தை போக்க உதவும்.
எனவே உங்களல் முடிந்த உதவியை குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக செய்யுங்கள்.. உங்கள் ஆதரவு அவர்களின் அவநம்பிக்கையை மகிழ்ச்சியாகவும், அவர்களின் நிச்சயமற்ற தன்மையை நம்பிக்கையாகவும், அவர்களின் கண்ணீரை புன்னகையாகவும் மாற்றும். துன்பம் எனும் இருள் சூழ்ந்த நேரத்தில் இருக்கும் அந்த குடும்பத்துக்கு வெளிச்சம் கட்டும் ஒளியாக இருக்கலாம்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications