Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛பாமக பிரமுகர் கொலை’’.. கொலையாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு.. என்ஐஏ அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக பிரமுகரான தஞ்சை ராமலிங்கத்தை கொலை செய்த கொலையாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என வழக்கை விசாரிக்கும் என்ஐஏ அறிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பாமகவின் முன்னாள் நகர செயலாளரான இவர் பாத்திரக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் தான் ராமலிங்கம் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடந்தது.

ramalingam pmk nia coimbatore tanjavur

மதமாற்றம் செய்வதை அவர் கண்டித்ததாகவும், அதில் ஏற்பட்ட விரோதத்தில் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் மொத்தம் 18 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் 13 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

அதன்பிறகு ராமலிங்கம் கொலை வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள் தனியாக வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் தொடர்புடைய 5 பேர் தலைமறைவாக உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா (39), கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த அப்துல் மஜீத்(42), வடக்குமாங்குடியைச் சேர்ந்த புர்ஹானுதீன்(33), திருவிடைமருதூரைச் சேர்ந்த ஷாஹூல் ஹமீத்(32), திருமங்கலக்குடியைச் சேர்ந்த நஃபீல் ஹாசன்(33) ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

இவர்கள் பற்றி என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டும் கூட இன்னும் துப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் 5 பேரையும் கைது செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. இந்நிலையில் தான் தலைமறைவாக உள்ள 5 பேர் பற்றிய விபரங்களை கூறுவோருக்கு ரூ.25 லட்சம் பரிசாக வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது. ஒருவருக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தம் 5 பேருக்கு ரூ.25 லட்சம் பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு அவர்கள் 5 பேரின் போட்டோக்கள், பெயர், முகவரியை அச்சடித்து கோவை, தங்சை, கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‛‛வழக்கில் தேடப்படும் மேற்கண்ட 5 நபர்களின் புகைப்படம், வயது, முகவரி விவரம், மேற்கண்ட நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் 'தேசிய புலனாய்வு முகமை, எண் 10, மில்லர்ஸ் சாலை, புரசைவாக்கம், சென்னை 600010 என்ற முகவரிக்கு தெரிவிக்கலாம்.

இந்த தகவல்களை 94999 45100, 99623 61122, 044 2661 5100 என்ற எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இல்லாவிட்டால் [email protected] என்ற மெயில் ஐடி மூலம் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+