பாமக நிர்வாகி ராமலிங்கம் படுகொலை வழக்கில் தப்பிய 2 பேர் கைது.. சென்னையில் வைத்து தூக்கிய என்.ஐ.ஏ!
சென்னை: கடந்த 2019 ஆம் ஆண்டு பாமக நிர்வாகி ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இரண்டு தலைமறைவு குற்றவாளிகளை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி ராமலிங்கம், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்தப் பகுதியில் நடந்த மதமாற்ற நடவடிக்கைகளை எதிர்த்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ராமலிங்கம் கொலைச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இந்த வழக்கின் விசாரணையை 2019, மார்ச் மாதத்தில் தமிழக போலீசாரிடமிருந்து தேசிய புலனாய்வு முகமை ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து 2019ம் ஆகஸ்ட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னையில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் 18 குற்றவாளிகள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது.
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்த 18 பேரில் ஆறு பேர் தலைமறைவாகி இருந்தனர். அவர்களைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு தலைக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. தலைமறைவானவர்கள் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு என்ஐஏ ஆறு தலைமறைவு குற்றவாளிகளில் ரஹ்மான் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பரில் திண்டுக்கல் மாவட்டம், பூம்பாறைக்கு அருகே அப்துல் மஜீத் மற்றும் ஷாஹுல் ஹமீது ஆகியோரை என்ஐஏ கைது செய்தது. மேலும் வழக்கில் 19-வது குற்றவாளியாக அடையாளம் காணப்படும் முகம்மது அலி ஜின்னா என்பவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
அப்துல் மஜீத் மற்றும் ஷாகுல் ஹமீது இருவரும் மீண்டும் தப்பிச் சென்ற நிலையில் என்ஐஏவால் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை கைது செய்ய என்.ஐ.ஏ தீவிரம் காட்டி வருகிறது.
கைது செய்யப்பட்ட அப்துல் மஜீத் மற்றும் ஷாகுல் ஹமீது ஆகிய இருவரும் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவரும் ராமலிங்கம் கொலையில் ஈடுபட்டதாகவும், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி, திருபுவனத்தில் உள்ள பெரியபள்ளி மசூதி அருகே, மற்ற குற்றவாளிகளுடன் இணைந்து மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி, வகுப்புவாத வெறுப்பினை பரப்பும் நோக்கத்துடன் ராமலிங்கத்தை வெட்ட சதி செய்திருந்ததாக என்ஐஏ நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications