பயங்கரவாத தொடர்பு.. 5 பேரை தனி இடத்தில் வைத்து துருவித் துருவி விசாரிக்கும் என்ஐஏ அதிகாரிகள்!
சென்னை : பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள 5 பேரை விசாரிக்க என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், அவர்களை தனி இடத்தில் வைத்து, என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி செய்ததாகவும், ஆட்களை அனுப்பியதாகவும் கூறி, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட 6 இடங்களில் அண்மையில் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
டெல்லியில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் தமிழ்நாட்டின் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தி, சென்னையைச் சேர்ந்த அப்துல் ரசாக் (47), மதுரை முகமது யூசுப் (35), முகமது அப்பாஸ் (45), திண்டுக்கல் கைசர்(45), தேனி சாதிக் அலி (39) ஆகியோரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவுக்கு ஆதரவான செயல்களில் ஈடுபட்டதும், ஆயுதங்களைக் கையாள்வது குறித்து இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்ததும் தெரியவந்தது. பயங்கரவாத அமைப்புடன் இருந்த தொடர்பு குறித்து சில டிஜிட்டல் ஆவணங்களும் சிக்கின.
இதையடுத்து, இந்த 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் மனுதாக்கல் செய்தனர். அவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி இளவழகன் அனுமதி அளித்தார். மேலும், வரும் 6ஆம் தேதி மீண்டும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

இதையடுத்து, 5 பேரையும் தனி இடத்தில் வைத்து, என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஆயுதப் பயிற்சி அளித்ததாகக் கூறப்படும் இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று, அங்கு விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications