காலையிலேயே இறங்கிய என்ஐஏ.. சென்னை உள்பட 6 இடங்களில் அதிரடி சோதனை! மன்னார்குடியில் ஒருவர் கைது
சென்னை: சென்னை, மன்னார்குடி உள்பட 6 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதலே என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். இதில் மன்னார்குடியில் பாபா பக்ருதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து ஒரு பென் டிரைவ் மற்றும் வங்கி கணக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் உறுப்பினராக இந்ததாக கூறப்படுகிறது.
காலையிலேயே போலீஸ் பாதுகாப்புடன் 5 மணி நேரத்துக்கும் மேலாக என்ஐஏ சோதனை நடந்தது. தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக வந்த தகவலின் பேரிலும், ஏற்கனவே கிடைத்த தகவலின் அடிப்படையிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக வந்த தகவலின் படி, சென்னை, மன்னார்குடி உள்ளிட்ட 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலையில் இருந்தே போலீஸ் பாதுகாப்புடன் சென்ற என்ஐஏ அதிகாரிகள் சந்தேகப்படும் வீடுகளில் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.
சென்னை, மன்னார்குடி என 6 இடங்களில் இந்த சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அதற்கு ஆள் சேர்த்ததாகவும் கிடைத்த தகவலின் பேரிலும், ஏற்கனவே கிடைத்திருந்த தகவலின் அடிப்படையிலும் தான் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மன்னார்குடியில் ஒரு வீட்டில் நடந்த சோதனையில், பாபா பக்ருதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாபா பக்ருதீன் வீட்டில் சுமார் 5 மணி நேரம் என் ஐஏ சோதனை நடந்தது. இதில் அவரது வீட்டில் இருந்து ஒரு பென் டிரைவ் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பாபா பக்ருதீன் தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் உறுப்பினராக இருந்ததாக கூறப்படுகிறது
இது தொடர்பாக பாபா பக்ருதீனிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நிறைவடைந்த பிறகே, இது தொடர்பான முழு விவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications