தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின - பேருந்து நிலையங்களில் தவித்த மக்கள்
தமிழகம் முழுவதும் நேற்று இரவு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இரவு நேர லாக்டவுன் காரணமாக சாலைகள் வெறிச்சோடின
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று இரவு நேர ஊரடங்கை முன்னிட்டு இரவு 9 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேம்பாலங்கள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பேருந்து நிலையங்களில் 10 மணிக்கு வந்த பயணிகள் ஊருக்கு செல்ல முடியாமல் அங்கேயே உறங்கி அதிகாலையில் புறப்பட்டு சென்றனர்.
Recommended Video
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும். இரவு ஊரடங்கு நேரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.
வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பஸ் போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ தேவைகளுக்கு, விமான நிலையம், ரயில் நிலையம் செல்வதற்கும் வாடகை கார், ஆட்டோ, தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

9 மணிக்கு கப்சிப்
தமிழகம் முழுவதும் நேற்று இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் கடைகள் இரவு 9 மணிக்கு அடைக்கப்பட்டன. போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

பலத்த கட்டுப்பாடு
சென்னையில் 200 இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனை நடைபெற்றது. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஊரடங்கை மீறி வெளியில் நடமாடுவோரை எச்சரித்து காவல்துறையினர் திருப்பி அனுப்பி வைத்தனர். பல பயணிகள் பேருந்து நிலையங்களில் சிக்கித்தவித்தனர்.

போக்குவரத்து தொடக்கம்
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கின் முதல் நாள் இன்று காலை 4 மணியோடு நிறைவு பெற்றது. பேருந்துகள் இல்லாமல் பேருந்து நிலையங்களிலேயே தங்கியிருந்த பயணிகள் பலர் அதிகாலை 4 மணி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கிய உடன் புறப்பட்டு சென்றனர். வெளி மாவட்டங்களுக்கான தொலைதூர பேருந்து சேவைகளில் தொடங்கின. மக்கள் இடைவெளியுடன் அமர்ந்து பயணித்தனர்.

இயல்பு நிலை திரும்பியது
பால், செய்தித்தாள் விநியோகம் உள்ளிட்ட பணிகளும் நடைபெறத் துவங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் தேநீர் கடைகள், ஹோட்டல்கள் திறக்கப்பட்டன. இந்த இரவு நேர ஊரடங்கானது இன்று இரவு 10 மணிக்கு மீண்டும் அமலுக்கு வருகிறது.

அடையாள அட்டை அவசியம்
24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் இயங்கவும், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அடையாள அட்டை அல்லது குறிப்பிட்ட நிறுவனத்தின் அனுமதி கடிதத்தை கையில் வைத்திருக்க வேண்டும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications