தலைத்தூக்கும் கொரோனா.. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகுமா? முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

இதனுடன் ஓமிக்ரான் அச்சமும் நிலவி வருகிறது. இது வேகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மழலையர் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை, திருமண, இறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் எண்ணிக்கையில் கட்டுப்பாடு உள்ளிட்டவை விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கொரோனா பரவியதை போல் பொங்கல் பண்டிகையில் தமிழகத்தில் மேலும் பாதிப்பு அதிகரித்துவிட வாய்ப்பிருக்கிறது. அத்துடன் ஓமிக்ரான் சமூகபரவலாகவிட்டதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகை கால கட்டுப்பாடுகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தினால் கொரோனா தொற்று குறையும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் ஆலோசனையை முன்வைத்ததாக சொல்லப்படுகிறது. எனவே ஆலோசனையின் முடிவில் இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தும் என்றே தெரிகிறது. அத்துடன் கோயில்களில் வாரஇறுதி நாட்களில் கட்டுப்பாடு, சுற்றுலா தளங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள், கடைகள் திறப்பு நேரத்தை குறைப்பது, கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் உள்ளிட்டவை அமலாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருப்போம்.
Recommended Video
இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications