'கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்'.. பிரதமர் மோடி குறித்து ஆ ராசா ட்வீட்டால் சர்ச்சை
சென்னை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி முழு மெஜாரிட்டி பெறாதது குறித்து 'கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்" என்ற தலைப்பில நீலகிரி திமுக எம்பி ஆ ராசா போட்ட ட்வீட் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2014ல் முழு மெஜாரிட்டி பெற்றது. 2019ல் அசுர பலத்துடன் ஆட்சியை பிடித்தது. ஆனால் 2024 தேர்தலில் முழு மெஜாரிட்டி பெறவில்லை.. கூட்டணி கட்சிகளின் தயவை நம்பியே ஆள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ராமர் கோயில் எழுப்பிய உத்தரப்பிரதேசத்திலேயே பாஜக எதிர்பாராதாவிதமாக பெரும் பின்னடைவை சந்தித்தது.

அதேபோல் மேற்கு வங்கத்திலும் கணிசமான தொகுதிகளை இழந்தது. இதுதவிர 2019ஐ ஒப்பிடும் போது பீகார், கர்நாடகாவிலும் கணிசமான தொகுதிகளை பறிகொடுத்துள்ளது. குஜராத்திலேயே ஒரு தொகுதியை இழந்துள்ளது. ராஜஸ்தானிலும் கணிசமான தொகுதிகளை இழந்துள்ளது. பஞ்சாப், தமிழ்நாட்டில் ஒரு தொகுதியை கூட வெல்லவில்லை..
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, பாஜக 240 தொகுதிகளில் வென்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும், ஜக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும், சிவசேனா ஷிண்டே பிரிவு 7 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி ஐந்து இடங்களிலும் வென்றுள்ளன. இதுதவிர பாஜ கூட்டணியில் உள்ள பல்வேறு சிறிய கட்சிகள் ஒன்று முதல் இரண்டு இடங்களில் வென்றுள்ளன. மொத்தம் 290க்கும் அதிகமான இடங்களில் பாஜக கூட்டணி வென்றுள்ளதால் மெஜாரிட்டியை பொறுத்தவரை பிரச்சனை இல்லை..
அதேநேரம் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பீகாரில் நிதீஷ்குமாரின் ஜக்கிய ஜனதா தளம் மற்றும் சில கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஐந்து ஆண்டுகள் பிரதமர் நரேந்திர மோடியால் ஆட்சியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மைனாரிட்டி ஆட்சியாகவே அடுத்த ஐந்து ஆண்டுகள் தொடரப்போவது உறுதியாகி உள்ளது.
முன்னதாக நரேந்திர மோடி தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "நான் என்னுடைய அம்மா இறக்கும் வரை சாதாரண ஒரு மனிதனாகவே என்னை நினைத்தேன். ஆனால் அவர் இறந்த பிறகு என் வாழ்க்கையில் நடந்த, நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் இணைத்து பார்க்கும் போது, நான் உயிரியல் ரீதியாக என்பதை தாண்டி, கடவுள் பூமியில் அவருடைய பணிகளை முடிக்க என்னை அனுப்பியுள்ளார் என்ற நினைக்கிறேன். இந்த பதவி, புகழ் எல்லாம் கடவுள் கொடுத்தது தான். அதனால் தான் நான் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலை பெற்றுள்ளேன் என நம்புகிறேன். நான் சொல்வதற்கு பல்வேறு விமர்சனங்கள் வரலாம். ஆனால் நான் உணர்ந்தவற்றை சொல்கிறேன். நான் கடவுளின் கருவி மட்டும் தான். அவர் என்னவெல்லாம் செய்ய நினைக்கிறாரோ அதை என் மூலம் செய்கிறார். நான் கடவுளை இதுவரைக்கும் பார்த்தது கிடையாது. பிறரைப் போல நானும் கடவுள் நம்பிக்கை கொண்டு வழிபட்டு வருகிறேன்" இவ்வாறு பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இதையடுத்து எதிர்க்கட்சிகள் கடவுளின் குழந்தை மோடி என்று கிண்டல் செய்தும் விமர்சித்தும் வருகின்றன. இந்நிலையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி முழு மெஜாரிட்டி பெறாதது குறித்து 'கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்" என்ற தலைப்பில நீலகிரி திமுக எம்பி ஆ ராசா போட்ட ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ட்வீட்டில்,.
"கடவுள் குழந்தையின்
கைகளில் பிச்சை பாத்திரம் !
அட்சயப்பாத்திரத்தோடு
ஆந்திராவும் பீகாரும் ;
கடவுளை மற
மனிதனை நினை !
பெரியார் வாழ்கிறார் !!" இவ்வாறு ஆ ராசா ட்வீட்டில் கூறியுள்ளார். இதற்கு பாஜகவினர் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications