விஸ்வரூபம் எடுத்த வேலூர்.. ஒரு மாவட்டத்தையும் விடாத தமிழக அரசு.. அசத்தலாக நடக்கும் ஐடி புரட்சி!
சென்னை: வேலூர் மாவட்டம் மேல்மொனவூர் அரசு ஐ.டி.ஐ வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள மினி டைடல் பூங்காவுக்கு இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறக்க உள்ளார்.
வேலூருடன் சேர்த்து விழுப்புரம், திருப்பூர் மற்றும் தூத்துக்குடியிலும் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்க கடந்த சில மாதங்களுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிலையில் இன்று வேலூர் டைடல் பூங்கா கட்டுமானம் முடிந்து திறக்கப்பட உள்ளது. இந்த திட்டங்களை தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயல்படுத்துகிறது.

முதல்வர் ஸ்டாலின் - வேலூர் திட்டம்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைப்பதோடு, பல முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார்.
திருச்செங்கோட்டில் ₹23 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 300 படுக்கைகள் கொண்ட புதிய அரசு மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதன் மூலம் அப்பகுதி மக்களின் மருத்துவத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூரில் ₹32 கோடி செலவில் அமைக்கப்பட்ட TIDEL Neo குறு தகவல் தொழில்நுட்ப பூங்காவையும் அவர் திறந்து வைக்கிறார். இந்தத் திட்டம் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராசிபுரத்தில் ₹37 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் TIDEL Neo திட்டத்திற்கான அடிக்கல்லையும் முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டுகிறார். இது அப்பகுதியில் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது.
வருகின்ற 2025 ஆம் ஆண்டு நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெறவுள்ள ஆண்களுக்கான FIH ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் சின்னத்தையும், கோப்பையையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
அடுத்தடுத்து வரும் டைடல் பார்க்குகள்
TIDEL நிறுவனம் ஈரோட்டில் புதிய TIDEL Neo பூங்காவை அமைக்க முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்திற்காக வடிவமைப்பு பொறியியல் மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கு ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது.
ஈரோடு மாவட்ட அனைத்து வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு (FATIA), ஈரோட்டில் புதிய நியோ-டைடல் பூங்கா அமைக்கும் மாநில அரசின் சமீபத்திய அறிவிப்பை வரவேற்றுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கூட்டமைப்பின் தலைவர் வி.கே. ராஜமாணிக்கம் மற்றும் பொதுச் செயலாளர் பி. ரவிச்சந்திரன் ஆகியோர் கூட்டாக எழுதிய கடிதத்தில், சமீபத்திய பட்ஜெட்டில் ஈரோட்டில் ஒரு லட்சம் சதுர அடியில் இந்த பூங்கா அமையவுள்ளதாகவும், இதன் மூலம் 4,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அரசு அறிவித்திருந்தது குறித்து குறிப்பிட்டனர். "மாவட்டத்தில் அதிக பொறியியல் கல்லூரிகள் இருப்பதால், இந்த பூங்கா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும்" என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் டைடல் பார்க்
இது போக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே எடப்பள்ளியில் எட்டு ஏக்கர் பரப்பளவில் புதிய மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்தப் பூங்கா சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளைக் கொண்டு வரும் வகையில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டில் சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் விழுப்புரம் ஆகிய நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் தொடங்கப்பட்டன. மேலும், தரமணி மற்றும் கோயம்புத்தூருக்குப் பிறகு, மாநிலத்தின் மூன்றாவது முழு அளவிலான டைடல் பூங்காவான ஆவடி பட்டாபிராம் டைடல் பூங்காவும் திறக்கப்பட்டது. தற்போது மதுரை, திருச்சி, திருப்பூர் மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் திருவண்ணாமலையில் நியோ டைடல் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
மினி டைடல் பார்க்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. அத்துடன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் விருதுநகர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நீலகிரியில் அமையவுள்ள டைடல் பூங்கா, டிபிஎஃப்ஓடி (DBFOT) அடிப்படையில் 45 வருட சலுகை காலத்துடன் செயல்படுத்தப்பட உள்ளது. திருப்பூரில் உள்ள ராக்கியபாளையம் பகுதியில் சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்ட டைடல் நியோ பார்க் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நீலகிரி டைடல் பூங்கா குறித்த இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications