“ஒரு கேள்வி கேக்க சொன்னா 9 கேள்வி”.. சட்டசபையில் எவ வேலு பேச்சால் குலுங்கி குலுங்கி சிரித்த அப்பாவு!
சென்னை: "ஒரு கேள்விக்கு பதிலாக ஒன்பது கேள்வி கேட்கிறார்கள்" என தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு சிரித்தபடி பேசியுள்ளார்.
ரயில்வே பாலம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் கேள்விக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார். அதேபோல, பாமக எம்.எல்.ஏ அருள் கேள்விக்கும் அமைச்சர் வேலு பதில் அளித்தார். அப்போது எவ வேலு பேச்சால், சபாநாயகர் அப்பாவு உள்பட உறுப்பினர்கள் அனைவரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடந்து வருகிறது. சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் எழுந்து,"கே.ஆர் தோப்பு முதல் முத்துநாயக்கன்பட்டி வரை சாலை குறுகலாக உள்ளது. சேலம் பள்ளபட்டி சூரமங்கலம் சாலையில் பாலத்தை செப்பனிட வேண்டும். இரண்டு ரவுண்டாக்கள் அமைக்க வேண்டும். சேலம் ஐந்து ரோட்டில் மழைநீர் வடிகால் அமைத்துத் தரவேண்டும்" என வரிசையாக கோரிக்கைகளை அடுக்கினார்.
இதையடுத்து அதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு,"ஒரு கேள்விக்கு பதிலாக ஒன்பது கேள்வி கேட்கிறார்கள். சேலம் மாநகரைச் சுற்றி 45 கி.மீ நீளத்திற்கு சுற்றுச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வில் உள்ளது" என பாமக எம்.எல்.ஏ.அருள் கேள்விக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.
மேலும் பல்வேறு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார். தேனி - மதுரை நெடுஞ்சாலையில் ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள் மிக மெதுவாக நடக்கிறது. விரைவு படுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். அதற்கு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி, அந்த திட்டப் பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய நெடுஞ்சாலைக் கோட்டம் அமைக்கப்படுமா என அதிமுக எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, "இந்த ஆண்டே இது தொடர்பாக ஆய்வு நடத்தி, புதிய கோட்டம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்." எனத் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications